サブ அருளாளன் இறந்து போனார். என்று அவருடைய சரித்திரத்தை எல்லாரும் சொல்லிக் கொண்டார்கள். அவர் இருந்த காலத்திலே யாவரும் கண்ணாரக் காணும்படியாக நடந்தார்; உடுத்தார்; நரைத்தார். இறந்த பிறகு அவர் செய்தவற்றையெல்லாம் செய்திகளாகப் பேசிக் கொண்டார்கள் மக்கள். இப்பொழுது அவரைப் பற்றியவை எல்லாம் வெறும் வார்த்தைகளாகக் கழி கின்றன. உண்மையான நிகழ்ச்சிகளாக முன்பு இருந்தவை கண்ணிலே காண முடியாமல் இறந்த காலத்துச் செய்தி களாகி, இப்பொழுது வெறும் சொல்லாகி நிற்கின்றன. அந்தச் சொல்லாவது நிலைத்து நிற்கிறதா? அதுவும் இல்லை. இறந்த புதிதில் சில காலம் இறந்தவரைப் பற்றிச் சொல் லிக்கொண்டிருக்கிறோம். அடடா! என்ன உயர்ந்த மாளிகை கட்டினார்! அந்த அலங்காரமான வாசலைத்தான் எவ்வளவு ஆசையோடு அமைத்தார்! அதற்கு எத்தனை செலவழித்தார்!' என்று சொல்லிக்கொண் டிருக்கிறோம். பின்பு சில காலம் கழிந்தால் அவருடைய நினைப்பும் மறந்து போகிறது. அவரைப் பற்றிப் பேசு வதும் நின்றுவிடுகிறது. மறுபடியும் புதிதாக இறந்தவர் களைப் பற்றிப் பேசுகிறோம். பணம் இப்படி அவர் கழிய, அவரைப் பற்றிய செய்திகள் சொல்லாய்க் கழிகின்றன. உலகத்தில் உள்ள எல்லா மக்களுடைய திறத்திலும் இதே நிலையைப் பார்க்கிறோம். இதுதான் வாழ்வு. நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார் நரைத்தார் இறந் தார்என்று நானிலத்தில் சொல்லாய்க்கழிகின்றது. சுந்தரமூர்த்தி நாயனார் இப்படி ஒரு பாட்டில் சொல் கிறார். இதனை நான் அறிந்தேன். உலக வாழ்க்கைச்
பக்கம்:அருளாளன் 1954.pdf/31
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை