சொல்லாய்க் கழிகின்றது 20 திருவாக்காலே மங்களாசாசனம் செய்துவிட்ட பிறகு அது பலருக்குத் தெரிகின்ற சிறப்பான இடம் ஆகிவிடுகிறது; பாடல் பெற்ற தலம் என்ற முத்திரையைப் பெறுகிறது. இப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்வாயில் அரத்துறை என்ற இறைவன் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார். அங்கே இறைவன் நீடு உறைகின்றான் என் பதை அறிந்தார். அதற்கு முன்னாலே அவர் அறிந்தது என்ன? 'நல்வாயில் செய்தார், நடந்தார், உடுத்தார். நரைத்தார், இறந்தார்' என்று பிற மக்களைப்பற்றி கானி லத்தில் உள்ள எல்லோரும் சொல்லிச் சொல்லி, அந்தச் சொல்லும் அப்பால் கழிந்து விடுகிறதை அறிந்தார். அதற்கு மேலே தெல்வாயில் அரத்துறையில் நீடு உறை கின்ற நிலா வெண்மதி சூடிய நின்மலன் ஒருவன் இருக்கின் றான் என்பதையும் நன்றாக அறிந்தார். அந்த விலாசத்தைத் தெரிந்து கொண்டாயிற்று; அந்த இடம் எத்தகையது என்று பார்க்க வேண்டாமா? அது வீட்டின் விலாசம் தெரிந்து விடுகின்றது. வீட்டை விசாரித்துக் கொண்டு வீதியிலே செல்லுகிறோம். வரைக்கும் அதனுடைய எண்ணை மாத்திரம் தேடிக் கொண்டு வந்த நாம், வீடு தெரிந்த பிறகு உள்ளே புகுந்து அங்கே இருக்கிற அழகான அறைகளையெல்லாம் பார்க் கிறோம். எவ்வளவு விசாலமான கூடம்! எத்தனை அறை கள்! அவற்றில் உள்ள அலங்காரங்கள் என்ன!' என்று எல்லாவற்றையும் பார்த்து மாளிகையின் அழகைக் கண்டு களிக்கின்றோம். அப்படியே சுந்தரமூர்த்தி நாயனார் நெல் வாயில் அரத்துறை என்னும் இடத்துக்கு வந்து ஆண்ட வன் நீடு உறைகின்ற தலமென்று அறிந்து,பார்க்கிறார். நெல்வாயில் என்பது கலத்தின் பெயர்; அரத்துறை என் .
பக்கம்:அருளாளன் 1954.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை