26 அருளாளன் பது கோயிலின் பெயர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அந்தத் தலத்தின் அழகையெல்லாம் பார்க்கிறார். ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். இந்தத் தலம் அழ குடைய ஊர்: ஆறு உள்ள ஊர். இங்கே வெள்ளாறு என்ற ஆறு ஓடுகிறது. அதை நிவா என்றும் சொல்லுவார்கள். அந்த வெள்ளாற்றின் கரையின்மேல் நெல்வாயில் அரத்துறை அமைந்திருக் கிறது. வெள்ளாறு அந்த ஊரிலே தோன்றி நின்றுவிடுவதா? இல்லை. அது மலையிலே பிறந்து இடையிலே பல காடுகளை யெல்லாம் கடந்து நெல்வாயிலையுந் தாண்டிச் செல்கிறது. மலையிலிருந்து வருவதற்கு அடையாளமாக அதில் உள்ள பண்டங்களை அது அடித்து வருகிறது. மலையிலே வளர்கிற பொருள்கள் பல; அவற்றில் அகில் ஒன்று. இயற்கையிலே மலையில் இருக்கின்ற பொருள்கள் பல ; மணிகள், வைரங்கள் அங்கே நிறைந்திருக்கின்றன. கல்லுக்கு இடையிலே வளர்ந்திருக்கின்ற அகிலை அரித்துக் கொண்டு நிவா என்ற வெள்ளாறு வருகிறது. அது மாத் திரமா? ஒளி வீசக்கூடிய மணிகளையுங்கொண்டு வேகமாக வருகிறது. கல்வாய் அகிலும் கதிர்மா மணியும் கலந்து உந்தி. அத்தகைய நிவாவின் கரையின்மேல், நெல்வாயில் அரத்துறையிலே நெடுங்காலமாக உறைகின்ற நின்மல் னாகிய நிலா வெண்மதி சூடியைப் பார்த்துச் சுந்தரர் பேசு கிறார். பிறைசூடியைப் பார்த்துப் பேசுவதிலே அவருக்கு எப்பொழுதும் விருப்பந்தானே? அவனிடம் ஒரு விண்ணப் பம் செய்து கொள்ளுகிறார். உலகத்தில் யார் யாரையோ
பக்கம்:அருளாளன் 1954.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை