பக்கம்:அருளாளன் 1954.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ சொல்லாய்க் கழிகின்றது 27 போய்க் கண்டேன், அவர்களுடைய செய்தியைக் கேட் டேன். அவர்களெல்லாம் வாழ்ந்தார்கள், செத்தார்கள் என்று கேட்கிறேனே ஒழிய, வாழ்ந்து நிலையாக உறை கிறார்கள் என்று கேட்கவில்லை. நிலையாக உறையும் நின் மலன் நீ என்று அறிந்தேன். உன்னிடத்தில் இப்பொழுது வந்தேன். உன்பால் ஒரு விண்ணப்பம் செய்துகொள் ளுகிறேன். அடியேன் உன்னைத் தொடர்ந்தேன். நான் மற்றவர்களைப்போல வாழ்ந்து இறந்து படாதவாறு உய் வதற்குரிய வழியை நீ சொல்லவேண்டும் என்று கேட்கிறார். ..அடியேன் தொடர்ந்தேன் உய்யப் போனதோர் சூழல் சொல்லே. றைவன் ஒருவன்தான் நிலையாக இருப்பவன் என் பது முதலில் அவ்வளவு சிறப்பாகத் தெரியாது. உல்ல கத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையாதது என்பதே முதலில் கண்கூடாகத் தெரியும். அதன் பிறகே இறை வனைத் தொடரும் முயற்சி எழும். அவனைத் தொடர்ந்து உய்யவேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகும். கல்வாய் அகி லும்கதிர் மாமணியும் கலந்துந்தி வரும்நிவ வின்கரைமேல் நெல்வாயில் அரத்துறை நீடுறையும் நிலவெண்மதி சூடிய நின்மலனே! நல்வாயில்செய் தார்தடந் தார்உடுத்தார் நரைத்தார் இறந் தாரென்று நாளிலத்தில் சொல்லாய்க்கழி கின்றது அறிந்தடியேன் தொடர்ந்தேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே. (கல்லினிடையிலே வளர்ந்த அகிலையும் ஒளியை வீசும் பெரிய வைரம் முதலிய மணிகளையும் கலந்து தள்ளிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/36&oldid=1725538" இலிருந்து மீள்விக்கப்பட்டது