பக்கம்:அருளாளன் 1954.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மால் முடியாது ஒரு கருத்தைச் சொல்லும்போது அழகாகச் சொல் வது கவிஞர்களின் இயல்பு. வெவ்வேறு வகையாகச் சொல்வார்கள். இறைவனைப் புகழும் துதிகள் தமிழில் எவ்வளவோ இருக்கின்றன. அவை யாவும் ஒரே மாதிரி இருந்தால் சுவை உண்டாகாது. நம்முடைய துன்பங்களை எடுத்து முறையிடுவது, இறைவனுடைய பெருமையை எடுத்துச் சொல்வது, அவனுடைய திருவிளையாடல்களைச் சொல்வது- இப்படிப் பலவகையில் இறைவனுடைய துதிகள் இருக்கின் றன. தேவாரத்திலும் பலவகையான துதிகளைக் காணலாம். இறைவனை முன்னிலைப் படுத்திச் சொல்வது, படர்க்கை யாக வைத்துச் சொல்வது என்று வெவ்வேறு வகையில் அமைந்த பாடல்கள் உள்ளன. சில இடங்களில் இறைவனை இகழ்வதுபோலத் தோற் றும் பாடல்களும் இருக்கின்றன; ஆனால் அவை மறைமுக மாக அவனுடைய புகழைச் சொல்லுவனவேயாகும். அவற்றை நிந்தாஸ்துதி என்று வடமொழியிலும், பழிப் பது போலப் புகழ்தல் என்று தமிழிலும் சொல்வார்கள். அப்படிச் சொல்வது ஓர் அலங்காரம். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுக்குத் தோழராக இருப்பவர். தம்பிரான் தோழர் என்பது அவருடைய பெயர்களில் ஒன்று. இறைவனை மிக எளியவனாக எண் ணிச் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். இறைவனிடம் மிக நெருங்கிக் கூறும் முறையில் அவை அமைந்திருக்கும். தமக்கு வேண்டிய பொருள்கள் இன்னவை யென்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/38&oldid=1725540" இலிருந்து மீள்விக்கப்பட்டது