நம்மால் முடியாது 31 வான்: வேலைக்காரனுக்குக் கொஞ்சம் கொடுக்க வேண் டுமே என்கிற நினைவே இராது. மற்றொரு பிள்ளையோ பார்த்தாலே பயப்படும்படி கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டிருப்பான். அவருடைய முதல் பெண்டாட்டி, செய்த வேலைக்குத் தக்கபடி கூலி கொடுக்கமாட்டாள். மாத மாதம் சம்பளங் கொடுக்க வேண்டுமே. அதற்கே தகராறு. I a அந்த வீட்டில் இருக்கிற அத்தனை பேரும் என் னுடைய நன்மையைக் கவனிக்காமல் தங்கள் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். நான் அங்கே எப்படி வேலை செய்வது? எனக்கு வேண்டிய பொருள்களை எப்படிப் பெறுவது? சம்பளமுங் கிடை யாது; சாப்பாடுங் கிடையாது; வேறு நன்மைகளும் இல்லை. ஆகையினாலே தான் நான் விட்டு வந்துவிட்டேன்" என்று அவன் சொன்னான். இப்படி சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனைப் பார்த்துப் பேசுகிறார்: "சுவாமி, உங்களுக்கு நானும் என் னைச் சார்ந்த அடியார்களும் ஆட்செய்ய மாட்டோம்' என்று சொல்லுகிறார். ஓணகாந்தன் தளி என்ற திருக் கோயிலுக்குச் சென்றபோது இறைவனைத் தரிசித்துத் தேவாரம் பாட ஆரம்பித்தார். அப்பொழுது அவருடைய உள்ளத்திலே பரிகாசமாகப் பாட வேண்டும் என்று தோன்றியது போலும்! பழிப்பது போலப் புகழும் துறை யிலே பாட ஆரம்பிக்கிறார். ஓணகாந்தன் தளி உளீரே! உங்களுக்கு ஆட் செய்யமாட்டோம். காஞ்சீபுரத்தில் இருப்பது ஓணகாந்த செய்யமாட்டோம் என்று தம்மையும் தளி தம்மைச்
பக்கம்:அருளாளன் 1954.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை