32 அருளாளன் : சார்ந்த அடியார்களையும் சேர்த்துச் சொல்லுகிறார். என்ன காரணம்? உம்முடைய தலையின்மேல் ஒருத்தி இருக்கிறாள். அந்தப் பெருமாட்டி வாயே திறப்பதில்லை.ஆனால் அவள் வரும்போதே ஆரவாரம் பெரிதாக இருக்கும். அழகான உம்முடைய சடா பாரத்திலே ஒளி வீசுகின்ற திங்களை வைத்திருக்கின்றீர். அதற்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அந்தப் பெருமாட்டி அலைக் கரங்களை வீசி ஆரவாரஞ் செய்கிறாள். என்னைக் கண்டால், உனக்கு என்ன வேண்டும். சாப்பிட்டாயா என்று கேட்பதே கிடை யாது. வாயை மூடிக் கொண்டிருக்கிறாள். அவளாலே எனக்கு ஒரு பயனும் இல்லை. திங்கள் தங்கு சடையின் மேல்ஓர் திரைகள் வந்து புரள வீசும் கங்கை யாளேல் வாய்திறவாள். வாச அடுத்தபடியாக உம்முடைய பிள்ளை ஒருவர் விலே உட்கார்ந்திருக்கிறார். எப்பொழுது போனாலும் அவர் தம்முடைய வயிற்றைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருக். கிறார். எந்தப் பண்டம் வந்தாலும் சரி, தம்முடைய வயிற் றுக்குள்ளே போட்டுக் கொள்வதற்கு அவர் சித்தராக இருக்கிறார். அவருக்கு எத்தனை கொடுத்தாலும் போதாது. அவரிடமிருந்து நான் எதையாவது வாங்கிக் கொள்வது என்பது சாத்தியமா? அவர் வயிறு மிகப் பெரிது, தம் வயிற்றுக்குப் போடும் திறத்தில் அவர் மகா உதாரியாக இருக்கிறார். மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு வராதே ஒழியத் தம்முடைய வயிற்றிலே தள்ளுவதற்கு அவர் கை தாராளமாக வரும். ஒரு கைக்கு ஐந்து கை படைத்திருக்கிறார். அதில் ஒரு கை மிக நீண்ட கை மனம்
பக்கம்:அருளாளன் 1954.pdf/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை