நம்மால் முடியாது 88 அந்தக் கணபதியினிடத்திலே நான் என்ன நன்மையைப் பெற முடியும்? கணபதியேல் வயிறு உதாரி. அடுத்தபடி ஒரு பிள்ளை; அவனுக்குக் குமரன் என்று பெயர். அவன் பக்கத்திலே போக முடி யாது. எப்போதும் கையில் வேலை வைத்துக் கொண் டிருக்கிறான். பக்கத்திலே போனால் அந்த வேலைப் பதம் பார்த்துவிட்டால் என்ன செய்வது? அருகிலே போய் எனக்கு இது வேண்டும் என்று கேட்ட பிற்பாடல்லவா நன்மை கிடைக்கும்? கண்டவர்களெல்லாம் அஞ்சும்படி யான கோலத்தில் அவன் இருக்கிறானே. ஆகவே அவனாலும் நமக்கு நன்மை கிடையாது. அங்கை வேலோன் குமரன் பிள்ளை. இவ்வளவும் இருக்கட்டும்; வீட்டிலே உள்ள பிள்ளைகள் பராமுகமாக இருந்தாலும் மற்றவர்கள் எப்படி இருந்தாலும் இருக்கட்டும். முக்கியமான தலைவி, அந்த வீட்டுக்குச் சொந்தக்காரி, கவனிப்பதாக இருந்தால் அவர்கள் எப்படி இருந்தாலும் இந்த அம்மாளுடைய தய வினாலே உய்யலாம் என்று நினைக்கலாம். ஆனால் இங்கே, அந்தத் தேவி என்ன செய்கிறாள் தெரியுமா? வேலை வாங்கிக்கொள்வதிலே கெட்டிக்காரி. ஆனால் சம்பளம் கேட்டால் கொடுப்பதில்லை. வேலைக்குத் தக்க கூலி கொடுக்கவேண்டாமோ? கூலிக்குக் கொற்று என்று பழங்காலத்திலே பெயர். கொற்றன் என்ற பெயரே அன்றன்று கூலி வாங்குகிற வனுக்குப் பெயர். கொற்று என்ற சொல்லிலிருந்து அந்தப் பெயர் வந்தது. அந்தக் கொற்றுக் கொடுத்தால் வேலை நடக்கும். இந்தத் தேவியோ வேலை வாங்கிக்கொள்கிறாள்; கொற்றுத் தருவதில்லை. B
பக்கம்:அருளாளன் 1954.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை