34 அருளாளன் கொற்றளந்த நாயகி என்று ஒரு தலத்திலே அம் மைக்குப் பெயர் உண்டு. அன்றன்றைக் கூலியை எம் பெருமாட்டி அளிக்கிறாள் என்ற நினைவோடு பெரிய வர்கள் அந்த நாமத்தை வைத்திருக்கிறார்கள். அவனவன் செய்கிற நல்ல தொண்டுக்கு ஏற்றபடி எம்பெருமாட்டி யாகிய அருட்சக்தி வேண்டிய போகங்களைப் படியளக் கிறாள் என்பதையே கொற்றளந்த நாயகி என்ற திரு நாமம் புலப்படுத்துகிறது. ஓணகாந்தன் தளியிலே இருக்கிற எம்பெருமாட்டி, கொற்று அட்டி ஆள்வதில்லை. வேலை கொடுப்பாளே தவிரக் கூலி கொடுத்து நம்மை ஆட்கொள்ளமாட்டாள். வேலையை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தால் வேலைக்காரன் வயிறு காய்வதா? தேவியார் கொற்று அட்டி ஆளார். . இப்படி,வாய் திறக்காத பெண்டாட்டி ஒருத்தி, ருகிற பொருளையெல்லாம் தன்னுடைய வயிற்றுக்குள்ளே அள்ளிப் போடுகிற பிள்ளை ஒருவன், எப்பொழுதும் கையிலே வேலை வைத்துக்கொண்டு பயமுறுத்தும் பிள்ளை ஒருவன், இவர்களுக்கு மேலாக எவ்வளவு வேலையை வாங்கினாலும் கூலி கொடுக்காமல் ஏமாற்றுகிற பெருமாட்டி - இவர்களெல்லாம் இருக்கிற குடும்பத்திலே வேலைக்காரன் ஒருவன் அகப்பட்டுக் கொண்டால் அவன் என்ன ஆவான்? அவன் உடம்பு என்ன கல்லா? அவன் மனசு இரும்பா? அங்கே வேலை செய்யத் தோன்றுமா? "உமக்கு வேலை செய்ய நம்மாலே முடியாது" என்று வேலைக் காரன் சொல்வது போல் சுந்தரமூர்த்தி நாயனார் பாடுகிறார். திங்கள் தங்கு சடையின் மேல்ஓர் திரைகள் வந்து புரள வீசும் கங்கை யாளேல் வாய்தி றவாள் கணப தியேல் வயிறு உதாரி i
பக்கம்:அருளாளன் 1954.pdf/43
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை