பக்கம்:அருளாளன் 1954.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுதல் ஒழியேன் றைவனுடன் தோழமை பூண்ட சுந்தரமூர்த்தி நாயனார் சில சமயங்களில் அவன்பால் சினம் உடைய வரைப் போலப் பாடுவதும் உண்டு. திருநாட்டியத்தான் குடி என்ற தலத்திற்கு அவர் சென்றார். அது சோழ நாட்டில் உள்ளது. அங்கே எம்பெருமான் ரத்தினகிரி நாதர் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறான். தேவியாருடைய திருநாமம் மலர் மங்கையம்மை என்பது. அங்கே போய்ச் சற்றுச் சினங்கொண்டவர் போலப் பாட ஆரம்பிக்கிறார்."நான் தேவரீரை அடிக்கடி நினைந்து கொண்டும் அணுகிக் கொண்டும் பணிந்து கொண்டும் இருக்கிறேன். ஆனால் தேவரீர்தாம் என்னைப் புறக் கணித்துக் கொண்டிருக்கிறீர்" என்ற கருத்திலே அவர் பாடலானார். இறைவனே, கண்டாலே அஞ்சி அகன்று போவதற் குரிய பொருள்கள் உன்னிடம் இருக்கின்றன. அவற்றைக் கண்டு அஞ்சி நான் உன்னை விட்டுச் செல்லமாட்டேன். உன்னுடைய உண்மையான பெருமையை உணர்ந்தவன் நான். புறத்தோற்றத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்ல. பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்பார்கள். உன்னுடைய திருமேனியில் பாம்பையே ஆபரணமாக அணிந்து கொண்டிருக்கிறாய். இடையிலே கட்டிய நாணும் பாம்புதான். உன்னுடைய பூணும் நாணும் பாம்பாக இருப்பதைக் கண்டால் "ஐயோ, பாம்பு நிரம்ப இருக்கின்றனவே!" என்று உன்னை அணுகுவதற்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/45&oldid=1725547" இலிருந்து மீள்விக்கப்பட்டது