பக்கம்:அருளாளன் 1954.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுதல் ஒழியேன் 39 னால் நான் உன்னைக் காணாமல் இருப்பதில்லை. மீண்டும் மீண்டும் உன் தரிசனத்தை அவாவிச் செல்கிறேன். காணீ ராகிலும் காண்பன். என்னுடைய மனத்தில் பிற பொருள்களிலே பற்று உண்டானால் உன்னை நினைக்க முடியாது, நானோ மற்றப் பற்று ஒன்றும் இல்லாமல் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.* இப்படி நான் இருப்பினும் உன் னுடைய திருவுள்ளத்திலே எளியேனுடைய நினைவு இருப்ப தாகத் தோன்றவில்லை. அப்படி அதனை உணர்ந்தும் நான் உன்னை மறப்பதில்லை; என் மனத்தால் உன்னையே நினைத் துக் கொண்டிருக்கிறேன். பிறிதொன்றை நினைப்பதில்லை; நினைத்தாலும் அது உன்னோடு தொடர்புடைய தாகவே இருக்கும். என் மனத்தால், கருதீராகிலும் கருதி. [கருதீராகிலும் என் மனத்தால் கருதி என்று கூட்ட வேண்டும்.) நீ என்னைக் காண்பதில்லை; என்னை நினைப்பதில்லை; நான் காணும்படியான அழகான கோலத்தில் இருப்ப தில்லை. ஆனாலும் நான் உன்னைக் காணுகிறேன்; கருது கிறேன். அது மாத்திரமா? உன்னை நினைப்பதனாலும் காண்பதனாலும் என்பால் உண்டாகும் உணர்ச்சியை வடித்துப் பாட்டாகப் பாடிக்கொண்டே இருக்கிறேன் உன்னைக் கண்டால் உன்னுடைய கோலத்தைப் பற்றிப் பாடுகிறேன். உன்னை நினைத்தால் உன்னுடைய பெருமை யைப் பற்றிப் பாடுகிறேன். பாடுவதே என்னுடைய வேலையாக இருக்கிறது. அந்த வேலையைத்தானே செய்யச் சொன்னாய்? நீ அப்படிக் கட்டளையிட்டமையினாலே.

  • 4- மற்றுப் பற்றெனக் கின் பிளதிருப்ரித மோனம்

பாவித்தேன் " என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/48&oldid=1725550" இலிருந்து மீள்விக்கப்பட்டது