பாடுதல் ஒழியேன் 41 படுத்திக் கொள்ளாமல் பிறருக்கே பயன்படும்படியாகச் செய்வார்கள்; மற்றவர்கள் பயன்படுத்தியது போக எஞ் சியதை உபயோகப்படுத்துவார்கள். ஒரு வீட்டிலே இருக்கிற தாய் தன்னுடைய கணவனுக்கும் குழந்தை களுக்கும் நல்ல உணவுப் பொருளைக் கொடுத்துவிட்டு, எஞ்சியிருப்பது வண்டலாக இருந்தாலும் கருகலாக இருந் தாலும் உண்ணுவது இயல்பு. அது அவளுடைய உண்மை அன்பினால் விளையும் செயல். அவ்வாறே எல்லாப் பொருள்களையும் உலகத்தில் உள்ள ஆருயிர்கள் நுகரும்படி படைத்தான் இறைவன். அழகா பொருள்களை அந்த மக்களும் தேவர்களும் அணிந்து கொள்ளச் செய்தான். தான் மாத்திரம் நஞ்சுடைய நாகத்தை அணிகிறான். பெரிய பெரிய இடங்களை. அழகான இடங்களை, அவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தான் மாத்திரம் சுடுகாட்டில் இருக்கிறான்: அங்கே ஆடுகிறான். 4 சுடுகாட்டிலே ஏன் ஆடவேண்டும் இறைவன்? அங்கே தான் மக்களுக்கு நிலையாமை புலப்படும். எங்கே அவர்கள் நிலையாமையை உணருகிறார்களோ அந்த இடத்திலே ஆண்டவனுடைய அருள் தோன்றும். அதனால்தான் புறங்காடாகிய சுடுகாடு இறைவனுக்கு ஏற்ற கோயி லாகிறது. எத்தனையோ வகையான நிலையில் இருக்கிற மக்கள் நன்றாக வாழும்போது இறைவனை நினைக்கமாட் டார்கள்; தம்முடைய வாழ்வு வாழ்வு நிலையாதது என்றும் நினைப்பதில்லை.ஆனால் யாரேனும் ஒருவர் இறக்கும்போது பிணத்தோடு சுடுகாட்டுக்குப் போனால். "நாளைக்கு நாமும் இப்படித்தான் இறப்போம்" என்ற நினைப்பு வருகிறது. யாராக இருந்தாலும் புறங்காட்டில் உலகம் நிலையாது. உடம்பு நிலையாது என்று தெரிந்துகொள்கிறார்கள். அது ஒருவகை ஞானந்தானே? .
பக்கம்:அருளாளன் 1954.pdf/50
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை