$ மாரன் அழிவும் துமாரன் அவதாரமும் 40 கதை. குழந்தைகளுக்குக் கதை சொல்லுவது போலப் புராணங்களை நம்முடைய பெரியவர்கள் சொல்லியிருக் கிறார்கள்; திருவருளைத் துணையாகக் கொண்டு சொல்லி யிருக்கிறார்கள். இறைவன் செய்தருளிய திருவிளையாடல்களைப் புரா ணங்கள் சொல்லுகின்றன. சில இடங்களில் முரண்பாடு இருப்பது போலத் தோன்றும். சிவபெருமானைப் பற்றிய கதைகள் பல. அவற்றுள் சிவபெருமான் கரம் சங்காரம் பண்ணினான் என்று ஒரு கதை வருகிறது. இறைவ னுடைய மனத்தைக் கலைப்பதற்காகத் தன்னுடைய மலர் அம்புகளுடனும் கரும்பு வில்லுடனும் காமன் வந்தான். வந்தவுடன் தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து சிவ பெருமான் பார்த்தான். அதனால் காமன் எரிந்தான் என் பது கந்த புராணத்தில் வரும் கதை. அதற்குப் பின்பு இறைவன் தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்க, அந்த ஆறு பொறிகளும் சேர்ந்து சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகள் ஆயின. அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து முருகன் என்ற ஒரு மூர்த்தியாக ஆயின. இதுவும் கந்த புராணத்தில் உள்ள வரலாறே. காமனை எரித்தான் சிவபெருமான் என்பதும், அவன் ஒரு குழந்தையைப் பெற்றான் என்ற செய்தியும் ஒன்றுக் கொன்று முரண்பாடுபோலத் தோன்றுகின்றன. முருகன் சிவபெருமானுக்குக் குழந்தை. உலகில் ஆணும் பெண்ணும் கலந்து இல் வாழ்க்கை நடத்தும்பொழுது அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்னாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உண்டாகிறது; அடைகிறார்கள். நுகர்ச்சியை காம அதன் பயனாகக் குழந்தை பிறக்கிறது. ஆனால் இறைவனோ காமத்தைக் கடந்தவன். காம நுகர்ச்சியினாலே அவனுக்குப் பிள்ளை
பக்கம்:அருளாளன் 1954.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை