பக்கம்:அருளாளன் 1954.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அருளாளன் பிறந்தது என்று சொல்வது பொருந்தாது. அதைத்தான் புராணம் நுட்பமாகத் தெரிவிக்கிறது. மற்றவர்கள் மாரனுடைய ஏவலினாலே காம நுகர்ச்சி பெற்றுக் குமாரர்களை அடைவார்கள். சிவபெரு மானோ மாரனுடைய ஏவல் பலிக்காமல் அவனை அழித் தார்; அதற்கு அப்பால் குமாரன் பிறந்தான், குமார னுடைய ஜனனம் மாரனுடைய முயற்சியினாலே வந்த ஜனனம் அன்று; ஞானத்தின் விளைவாக வந்த ஜனனம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தில் இந்த இரண்டு செய்திகளையும் ஒரு சேர வைக்கிறார். ท சோழ நாட்டில் உள்ள கலயநல்லூர் என்ற ஊருக்கு அவர் போனார். வழக்கம் போல அங்கே இருக் கின்ற இறைவனைத் தரிசித்தார்; தரிசித்துப் பதிகம் பாடி னார். அதில் ஒரு பாட்டில் இந்த இரண்டு செய்திகளையும் ஒருங்கே வைத்திருக்கிறார். முருகனை இறைவன் அவதரிக் கச் செய்தான். அப்பெருமான் அவதாரம் செய்வதற்குக் காரணம் என்ன? தேவர்களுக்குரிய பொருள்களை யெல்லாம் அசுரர்கள் வவ்விக்கொண்டு அவர்களை அடிமைப் படுத்தி விட்டார்கள். இந்திரன் கற்பகத்தோடும் காம தேனுவோடும் வாழ்ந்திருந்த வளவாழ்வை இழந்தான். அவன் எங்கோ போய் மறைந்து கொண்டான். அவ னுடைய பிள்ளையாகிய சயந்தனை அசுரர்கள் வைத்து விட்டார்கள். இந்திராணியும் எங்கோ ஓடுங்கிக் கிடந்தாள். தேவர்களின் வாழ்வு குலைந்து போயிற்று. சிறை இந்த நிலையில் தேவர்கள் யாவரும் சென்று இறைவ னிடம் முறையிட்டுக் கொண்டார்கள். இறைவன் பார்த் தான். 'நாம் எத்தனையோ திருவிளையாடல்களைச் செய் திருக்கிறோம். இப்பொழுது நாமே முருகனாக அவதாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/55&oldid=1725557" இலிருந்து மீள்விக்கப்பட்டது