மாரன் அழிவும் குமாரன் அவதாரமும் 47 ஐந்து செய்வோம்' என்று நினைத்தான். தன்னுடைய முகத்தோடு அதோ முகமாகிய ஒன்றையும் சேர்த்து ஆறுமுக நாதனாக எழுந்தருளினான். தானே தந்தையாகவும் தானே பிள்ளையாகவும் இருக் கும் நிலை இறைவனுக்கு உண்டு. நம் இயல்புக்கும் இறை வனுடைய இயல்புக்கும் வேறுபாடு உண்டு. தந்தை, பிள்ளை, மனைவி என்று இறைவனோடு சார்த்திச் சொல்லு கின்ற உறவுமுறை உலகிலுள்ள மக்களின் உறவுமுறை யைப் போன்றது அல்ல. அது தத்துவத்தோடு சார்ந்த கருத்தையுடையது. தானே தந்தையாகவும் தானே குழந்தையாகவும் இறைவன் தோன்றினான். குழந்தையாகத் தோன்றின போது முருகன் ஆனான். எதற்காக அவ்வாறு தோன்றி னான்? தேவர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ள அவர்களுடைய இடுக்கண்களைத் தீர்த்து அசுரர்களைக் கொன்று மீண்டும் அவர்களுக்குரிய பதவியைத் தருவதற் காகத்தான் முருகன் திரு அவதாரம் செய்தான். அந்த அசுரர்களில் தாருகன் என்பவன் ஒருவன். அவன் ஆனை முகம் உடையவன். அவனை முருகன் திரு அவதாரஞ் செய்து கொன்ற செய்தியைச் சுந்தரமூர்த்தி நாயனார் முத விலே நினைக்கிறார். பலவகையான பலத்தை உடைய அசுரன் அவன். அவனைப் பொருது கொன்று உலகத்துக்கு ன்பத்தைத் தந்த பெருமான் முருகன். அந்த முருகனைத் திரு அவதாரஞ் செய்யும்படி செய்தவன் சிவபெருமான். பொரும்பலம துடைஅசுரன் தாருகனைப் பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்துஉகந்த புனிதன். முருகனைப் படைத்து உகந்த புனிதன் இறைவன். முருகனுடைய திருவவதாரத்தால் யாவருக்கும் இன்பம் உண்டாவதனால், திரு உள்ளங் களித்தான் ஆண்டவன். "
பக்கம்:அருளாளன் 1954.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை