43. அருளாளன் இறைவன் குழந்தையைப் பெற்றது காம உணர்ச்சியி னாலே விளைந்த செயலா? அவன் பெருமான் அல்லவா? காமனையே வென்ற கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக் கனல்விழித்த கண்ணுதலோன். கரும்பை வில்லாகவும் ஐந்து மலர்களை வாளியாகவும் கொண்டு, தன்னுடைய ஆணையை உலகத்தில் எங்கும் செலுத்தி வெற்றி பெறுகின்ற காமனுடைய உடலம் வெந்து பொடியாகும்படியாக, தன்னுடைய கனல் விழி யைத் திறந்த நெற்றிக் கண்ணை உடையவன் ஆண்டவள்; காமனை எரித்தவன். அவனுக்குக் குமாரன் பிறந்தான்; அது காமத்தின் விளைவினாலே வந்தது அல்ல. மாரன் அழிந்து குமாரன் தோன்றினான். மாரனுடைய மரணமும் குமாரனுடைய ஜனனமும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. காமத்தை அழித்து வீழ்த்து கின்ற ஞானமே திரு உருவாக முருகன் எழுந்தருளினான். பிறகு அசுரர் என்றும் சுரர் என்றும் வேறு பிரித்துச் சொல் கின்ற இரண்டு சாதிகளும் இரண்டு வகையான குணங் களைக் காட்டுகின்றன. மனிதர்களுடைய உள்ளத்தில் தேவ சம்பத்து. அசுர சம்பத்து என்ற இரண்டு வகையான குணங்கள் இருக்கின்றன. அந்த இரண்டு குணங்களுக் கும் எப்பொழுதும் போர் நடந்துகொண்டே இருக்கிறது. எப்பொழுது தீய சக்திகளுக்கும் நல்ல சக்திகளுக்கும் போர் உண்டாகிறதோ அப்பொழுதெல்லாம் தேவாசுர யுத்தம் நடப்பதாகத்தான் கொள்ளவேண்டும். ஒவ்வொருவ னுடைய மனமும் போர்க்களமாக இருக்கிறது. அந்த மனத் தில் தோன்றுகிற தீய எண்ணங்கள் நல்ல எண்ணங்களை அழிப்பதற்கு முயலுகின்றன. இறைவனுடைய திருவருள் இருந்தால் நல்ல எண்ணங்கள் வெல்லுகின்றன. இல்லா
பக்கம்:அருளாளன் 1954.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை