மாரன் அழிவும் தமாரன் அவதாரமும் 49 விட்டால் தீய எண்ணங்கள் மேல் ஓங்கி நிற்கின்றன. புராணத்தில் வரும் நினைவூட்டுகின்றன. ஞானமே போர்கள் இதைத்தான் நமக்கு உருவானவனாகிய முருகன் அவதாரம் செய்தான். அஞ்ஞானத்தின் மயமாயிருந்த தாருகன். சூரன் முதலிய அசுரர்கள் இறந்து ஒழிந்தார்கள். முருகன் ஞான வடிவினன் என்பதை, நீயான ஞான விநோதந் தனைஎன்று நீயருள்வாய் என்று
அருணகிரிநாதர் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். சிவகுமாரனுடைய ஜனனம் மனித குமாரர்களுடைய ஜனனத்தைப் போன்றது அன்று. ஞானத்தின் விளைவாக வந்த திரு அவதாரம் அது. ஞானத் துக்குத் தடையாக இருக்கிற காமன் அழிந்த பிறகே குமாரன் எழுந்தருளினான்; அவதாரம் செய்தான். அவதாரம் செய்து அஞ்ஞானத்தின் உருவங்களாக இருந்த தாருகன் முதலியவர்களைப் பொருதான். மார தகனமும் குமார ஜனனமும் ஆருயிர்களுக்கு அஞ்ஞானம் காமம் முதலிய வற்றைப் போக்கும் ஞானத்தையும், இன்பத்தையும் தருகிறவன் இறைவன் என்ற கருத்தையே புலப் படுத்துகின்றன. பொரும்பமை துடைஅசுரன் தாருகனைப் பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்துகந்தபுனிதன் கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக் கனல்விழித்த கண்ணுதலோன். [போரிடுகின்ற வலிமையை உடைய அசுரனாகிய தாருகனை எதிர்த்து அவனை அழியச் செய்த மகனாகிய முருகனை முன்பு தோற்றுவித்து மகிழ்ந்த தாய பெருமான், கரும்பு வில்லையும் மலரம்புகளையும் உடைய காமனது உடம்பு வேகும்படியாகத். தீயாக விழித்த நெற்றிக் கண்ணை உடையவன். 4