50 பொரும்-போரிடும். அருகாளன் பொன்றுவித்த - இறக்கச் செய்த. பொருள் - பிள்ளை. புனிதன்- தூயவன். விலின். வில்லின்; விகாரம். வாளி-அம்பு. கனல் விழித்த-நெருப்புத் தோன்ற கண்நுதலோன் - கண்ணை நெற்றியில் உடையவன்.) விழித்த. தலத்தைப் பற்றிய வருணனை பின்பு வருகிறது. எம்பெருமான் உலகிலுள்ள மக்களையெல்லாம் பாது காக்க வேண்டும் என்று கருதி, சர்வாந்தர்யாமியாக இருந் தாலும் மூர்த்தியாகப் பல தலங்களிலே எழுந்தருளியிருக் கிறான். நாம் விரும்பியதனால் அப்படி எழுந்தருளியிருக்க வில்லை. உலகிலுள்ள ஆருயிர்களைக் காக்கவேண்டும் என்று தானே திருவுள்ளத்தில் கொண்டு விரும்பி எழுந் தருளியிருக்கிறான். அவ்வாறு எழுந்தருளியுள்ள ஊர்கள் பல. 'அவற்றில் இப்போது கூறப்புகும் ஊர் யாது? என்று கேட்டால் சுந்தரர் விடை கூறுகிறார். கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில் என்று ஆரம்பிக்கிறார். கலயநல்லூர் சோற்று வளம் நிரம்பிய சோழநாட்டில் இருப்பது.நீர் வளமும் நில வளமும் நிறைந்தது சோழ நாடு; எங்கே பார்த்தாலும் காவிரியின் நீர் பரவி வளம் படுத்தும் நாடு. காவிரியிலிருந்து பிரிந்த பல ஆறுகள் அங்கங்கே பாய்ந்து வயல்களை ஊட்டுகின்றன. அத்தகைய ஆறுகளில் அரிசில் ஆறு என்பது ஒன்று. அந்த ஆற்றின் தென்கரையில் கலயநல்லூர் இருக்கிறது. அவ்வாற்றின் நீர்வளம் எத்தகையது? வெண்மையான அலைகளை வீசிக் கரைகளை மோதிக்கொண்டு வருகிறது ஆறு. குடகு மலையிலிருந்து வருகிற காவிரியின் கிளை களையும் காடுகளையும் கடந்து வரும் பொழுது
. அது. மலை