மாரன் அழிவும் துமாரன் அவதாரமும் 54 இடையிலே விளையும் பொருள்களைத் தன்னுடைய திரைக் கைகளாலே ஏந்திக்கொண்டு வருகிறது. காவிரி நதி : ஏலம். இலவங்கம் முதலியவற்றைத் தாங்கி வருகிறது. அவை அரிசிலாற்றிலும் நீரோடு வருகின்றன. இரண்டு கரை களிலும் அவற்றை வீசுகின்றது. இரும்புனல்வெண் நிரைபெருகி ஏலம்இல வங்கம் இருகரையும் பொருது அலைக்கும் அரிசில். [மிக்க வெள்ளத்தின் வெண்மையான அலைகள் பெருகி எலந்தையும் இலவங்கத்தையும் இரண்டு கரைகளிலும் மோதி அலையச் செய்யும் அரிசிலாறு.] அரிசிலின் நீராலே வளம் பெறுகின்ற ஊரின் இயல்பு எப்படி இருக்கிறது ? அவ்வூரில் எங்கே பார்த்தாலும் பொழில்கள் நிரம்பி இருக்கின்றன. பொழில்களில் பலவகை மரங்கள் வானளவும் உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன. வேறு நிலங் களில் வளரும் மரங்களும் இங்கே வளர்கின்றன. நெய்தல் நிலத்தில் வளரும் புன்னை மரங்களையும் இங்கே காணலாம். அந்தப் புன்னையின் அடி மரம் கன்னங்கரேலென்று இருக் கிறது. அதன் பூவில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் ஆகிய மூன்று நிறங்களும் உள்ளன. அதன் இதழ்களெல்லாம் வெள்ளையாக இருக்கும். கேசரங்கள் பொன்னிறம் பெற்றிருக்கும். அந்தக் கேசரங்களுக்கு நடுவில் முட்டை வடிவம் போன்ற ஓர் உறுப்புச் சிவப்பாக இருக்கும். இதழ்களெல்லாம் மூடிக்கொண்டு அரும்பாக இருக்கும் பொழுது பார்த்தால் புன்னையின் மொட்டு முத்தைப் போலத் தோன்றும். கரும் புன்னை வெண்முத்து அரும்பு கிறது. பின்பு மலர்கிறது. அப்போது அதனுடைய கேசரங்களெல்லாம் தோன்றுகின்றன; அவை பொன்னிறம் பெற்றிருக்கின்றன.
பக்கம்:அருளாளன் 1954.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை