வேறுக வந்து அருள்பவன் 55 இன்பங்களையும் பெறுகின்ற நான் உன்னை நினையாமல் இருப்பது மிகவும் தவறு. எனக்குச் சில சமயங்களில் அகங்காரத்தினாலே மயக்கம் உண்டாகின்றது. தருக்கினால் தலை நிமிர்ந்து போகிறது. அப்படி மோறாந்து ஒவ்வொரு சமயத்தில் உன்னை நினையாமல் இருக்கிறேன். 'இவன் இப்படி நம்மை நினைக்கவில்லையே' என்று நீ என்னை மறந் திருக்கவில்லை. எப்படியாவது என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதே உன்னுடைய நினைவு. 'இவன் மறந்து விட்டாலும் நாம் இவனை நினைத்து வேண்டியவற்றைச் செய்ய வேண்டும்' என்ற பேரருள் உடையவன் நீ. அவரவர்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலன்களைக் கொடுத்துக்கொண்டு வருகின்ற உனக்கு எத்தனையோ வேலைகள் இருக்கின்றன. தேவர்களும் முனிவர்களும் கொள்ளு பக்தர்களும் உன்னிடம் வந்து வேண்டிக் கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவற்றை அருளும் செயலிலே நீ ஈடுபட்டிருக்கிறாய். அவரவர்களுடைய விருப்பங்களைக் கூட்டுவிக்கின்ற பெரிய வேலை உனக்கு உண்டு. அந்த வேலைகளுக்கிடையிலே என்னை நீ தனியா நினைக்கிறாய். வீட்டிலே பல குழந்தைகள் ஓடியாடி விளை யாடிக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு வேண்டிய வற்றைக் கவனிக்கிறாள் தாய். திடீரென்று மூலையில் கிடக்கின்ற முடக் குழந்தையை நினைத்துக்கொண்டு ஓடி வருகிறாள். மற்றவர்களை விட்டுத் தனியே வந்து எடுத்து உச்சி மோந்து பாலூட்டிச் சீராட்டுகிறாள். அவ்வாறே உன்னை நீ தனியாக என்னிடத்திலே வருகிறாய். நான் நினைப்பதில்லை; உன்னை அழைப்பதில்லை; உன்னைப் பாடு வதில்லை. இருப்பினும், அத்தனை கூட்டத்திலும் நான் இல்லையே என்று நினைந்து தனியாக என்னை நாடி ஓடி வருகிறாய். வந்து என்னுடைய உள்ளத்துக்குள்ளே புகு கின்றாய். உன்னை நினைக்காத உள்ளம் மாசு படிந்திருக்
பக்கம்:அருளாளன் 1954.pdf/64
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை