பக்கம்:அருளாளன் 1954.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. னதளாளன் : அந்த குமே என்று நீ எண்ணவில்லை. எப்படியாவது உள்ளத்துக்குள்ளே புகுந்து அங்கே உட்கார்ந்துகொண்டு விடுகிறாய். என் உள்ளத்திலே நீ புகுந்த பிறகு நான் உன்னை நினைக்காமல் இருக்க முடியுமா? மோருந்து ஓரொருகால் நினையாது இருந்தாலும் வேறாவற் தென் உள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே! (மோந்து -- தருக்கினால் தலையெடுத்து.) நீ தான் உண்மையான பொருள். மற்றவர்களெல்லாம் அவ்வப்பொழுது என்னிடத்தில் அன்புடையவர்களாகக் காட்டுகிறார்களே ஒழிய அந்த அன்பு மெய்யான அன்பு அல்ல. அவர்களே பொய்யர்கள். அவர்களுடைய வாழ்க்கை பொய்; அவர்களுடைய நினைப்புப் பொய்; அவர்களுடைய பேச்சுப் பொய்; அவர்களுடைய செயல்களெல்லாம் பொய். உலகத்திலுள்ள எல்லாருடைய செய்திகளும் அத்தகை யனவே. நீ செய்கிற காரியந்தான் உண்மையானது. ந் தான் உண்மையான பொருள். உண்மையான பொரு ளாகிய நீ வந்து, நான் நினைக்காவிட்டாலும் என் உள்ளத் திலே புகுகின்றாய். அதற்குரிய கருணை உனக்குத்தான் இருக்கிறதேயன்றி வேறு யாருக்கும் இல்லை. உனக்கு உள்ள வலிமையே அந்தக் கருணைதானே?

காஞ்சீபுரத்தில் பல கோயில்கள் உண்டு. அவற்றுள் திருமேற்றளி என்பது ஒன்று; பிள்ளையார் பாளையம் என்ற பகுதியில் இருப்பது. அந்தத் தலத்திலேதான் இந்தக் கருத்துக்களையெல்லாம் சுந்தரமூர்த்தி நாயனார் எண்ணு கிறார். சுற்றிலும் வயல்கள் நிரம்பிய இடம் அது. தொண்டை நாட்டார் வயல்களைக் கழனி என்று சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/65&oldid=1725567" இலிருந்து மீள்விக்கப்பட்டது