வேற்க வந்து அருள்பவன் 57 வார்கள். திருமேற்றளியில் சேறு நிரம்பிய குளிர்ந்த கழனி கள் சுற்றிலும் இருக்கின்றன. சேறார் தண்கழனித் திருமேற்றளி கழனிகளில் சேறு மணக்கிறது. தானே சோற்று வளத்துக்குக் காரணம்? சேற்று வளந் திருமேற்றளியில் எம்பெருமான் எழுந்தருளியிருக் கிறான். எப்படி எழுந்தருளி யிருக்கிறான்? தனக்குச் சமானமாக வேறு யாரும் இல்லாமல் ஒரு சிங்கத்தைப் போல இருக்கிறான். சிங்கத்துக்குத் தன் காடு பிறன் காடு என்பது இல்லை. அது எந்த இடத்தில் இருந்தாலும் அத னுடைய முழக்கமே சிறப்பாக இருக்கும். ஆண்டவன் எந்த இடத்தில் திருக்கோயில் கொண்டிருந்தாலும் அவன் தலைமை பெற்று வீற்றிருப்பான். இங்கே எம்பெருமான் சிங்கத்தைப்போல வீற்றிருக்கின்றானாம். திருமேற் றளிஉறையும் ஏறே! நான் மறந்திருந்தாலும் என்னை மறவாமல் தான் வந்து என்னுடைய உள்ளத்திலே புகவல்ல கருணைப் பெரு மானாகிய ஆண்டவன்தான் உண்மையான பொருள். எது உண்மையான பொருளோ அதைத்தான் நாம் நினைக்க வேண்டும். பொய்யான பொருளையெல்லாம் நினைத்துப் போற்றினால் அதனாலே நமக்கு யாதொரு பயனும் உண்டா வதில்லை. ஏதேனும் உண்டானாலும் நிலைப்பதில்லை. இவற்றையெல்லாம் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.நீ என்னிடத்திலே மிக்க கருணை உடையான் என்பதையும் தெரிந்து கொண்டேன். அப்படி இருக்க, நான் அடுத் தடுத்து நச்சினாலுங்கூட இன்பந்தராத மக்களிடம் சென்று முயன்று ஒன்றைப் பெறுவதற்காகப் பாடுபடுவது எதற்கு? நான் நினையாமல் இருக்கும்பொழுதும் என்னை நினைந்து
பக்கம்:அருளாளன் 1954.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை