இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வேறுக வந்து அருள்பவன் 59 காஞ்சீபுரத்தின் மேற்குப் பகுதியில் இருப்பதால் இதற்கு மேற்றளி என்ற பெயர் வந்தது; மேல்பால் உள்ள தளி என்று கொள்ள வேண்டும்; தளி- கோயில். திருமால் சிவ சொரூபம் பெற்ற தலம் என்பது தல வர லாறு. திருமேற்றளியீசர் சந்நிதி ஒன்றும். திருமால் சிவ லிங்க உருவான சந்நிதி ஒன்றும் இங்கே இருக்கின்றன. திருஞானசம்பந்தப் பெருமான் பாடலைக் கேட்டுத் திருமால் உருகிச் சிவலிங்க உருவடைந்தார் என்று தல வரலாறு கூறுகிறது.