அருளின் விளைவு . சோழ நாட்டில் கஞ்சனூர் என்பது ஒரு தலம். அங்கே அரதத்த சிவாசாரியார் என்ற ஒரு பெரிய பக்தர் வாழ்ந்திருந்தார். அவர் பல நூல்களை எழுதியிருக்கிறார்; சிவபெருமானிடத்தில் ஆராத காதல் உடையவர். அவர் அங்குள்ள அக்கினிபுரீசுவர சுவாமி கோயிலுக்குத் தினந் தோறும் சென்று வருவார். ஒருநாள் தம்முடைய மாணாக் கர்களுடன் கோயிலுக்குப் போனார். அப்பொழுது தர்ம கர்த்தா கோயில் தாசியை மரத்தோடு வைத்துக் கட்டி அடித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட அப்பெரியார், "ஏன் இவளை அடிக்கிறார்கள்?" என்று கேட்டார். · "இவள் தினந்தோறும் இறைவனுக்குச் சேவகம் செய்ய வேண்டியவள். மூன்று நாளாகச் சொல்லிக் கொள் ளாமல் வெளியூருக்குப் போய்விட்டாள். தன்னுடைய கடமையினின்றும் பிறழ்ந்ததனால் அடிக்கிறார்கள்" என்று ஒருவர் கூறினார். அதைக் கேட்டவுடனே அரதத்த சிவாசாரியாருடைய கண்ணிலே நீர் மல்கியது; விம்மி விம்மி அழத் தொடங்கி னார், அது சுண்டு மற்றவர்களுக்கு ஒன்றும் விளங்க வில்லை. அவருடைய மாணாக்கர்களுக்கும் அந்தக் காட்சி வியப்பாக இருந்தது. தாசி அடிபட்டதைக் கண்டு இரங்குவதற்கு என்ன காரணம் என்று அவர்கள் யோசித் தார்கள். தங்கள் குருவினுடைய பெருமையை நன்கு உணர்ந்தவர்களாகையினால் அவர்கள் தவறாக ஒன்றும் நினைக்கவில்லை. ஆனாலும் எதற்காக இப்படி அழுகிறார் என்பதற்குரிய காரணம் அவர்களுக்குத் தெளிவாகத் தோன்றவில்லை.
பக்கம்:அருளாளன் 1954.pdf/69
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை