பக்கம்:அருளாளன் 1954.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும், திருவெண்ணெய்நல் லூரும் திருநாவலூரும், திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் என்பவை. மற்ற 90 பதிகங்களும் ஒவ்வொரு தலத்தைப் பற்றி யவை. திருவாரூரைப்பற்றி எட்டுப் பதிகங்களும், திருவாரூர்ப் பரவையுண்மண்டளியைப்பற்றி ஒரு பதிகமும் இவர் பாடினார். திருவாருரில் பல காலம் வாழ்ந்தமையால் அத்தலத்தைப்பற்றிப் பல பதிகங்கள் பாடும் வாய்ப்பு உண்டாயிற்று. ந்தப் புத்தகத்தில் ஒன்பது திருப்பாடல்களுக்குரிய விளக் கங்களைக் காணலாம். திருவெண்ணெய்நல்லூர், திருநெல்வா யில் அரத்துறை, திரு ஒணகாத்தன் தளி, திருநாட்டியத்தான்குடி, திருக்கலயநல்லூர், திருக்கச்சிமேற்றளி, திருக்கழிப்பாலை, திருக் கருப்பறியலூர், திருப்புகலூர் என்ற தலங்களைப்பற்றிய பாடல் கள் அவை. தம்மைத் தடுத்தாட்கொண்டபோது ஆளுடையாம்பி பாடிய பதிகத்திலுள்ள முதற் பாட்டுக்குரிய விளக்கமே முதற் கட்டுரை. இறுதிக் கட்டுரை திருப்புகலூரில் இறைவன் திருவரு ளால் செங்கல் பொன்னாக மாறியது கண்டு பாடிய பதிகத்தின் முதற் பாட்டின் விளக்கம்.

இறைவனுடைய திருவருட்சிறப்பைத் தம்முடைய வாழ்க்கை யோடு ஒட்டிக் கண்டு உருகும் இயல்புடையவர் நம்பியாரூரர். இந்தப் புத்தகத்தில் உள்ள பாடல்கள் இவருடைய உணர்ச்சி நிலையை நன்றாக வெளிப்படுத்துகின்றன. இறைவன் அடியார் களை ஆளும் திறத்தில் பித்தாக நிற்பதும், அவர்கள் தன்னை மறந் தாலும் அவர்களை. ஆட்கொள்ளுவதற்கு முந்துவதும், இம்மை மறுமைப் பயன்களை ஈவதும், அடியார்களை மறக் கருணையால் ஒறுத்துத் திருத்துவதும் ஆகிய கருணைச் செயல்களை எடுத்துரைக் கிறார் சுத்தார். உலகத்தில் மக்கள் வாழ்க்கை நிலையாமல் கழி வதையும், செல்வம் படைத்தவர்கள் தம்மைப் பாடுலோருக்கு ஒன்றும் வழங்காமல் இருப்பதையும் குறிக்கிறார். புலவர்களை நோக்கி, "எம்பெருமானைப் பாடுங்கள். அதனால் இருமையிலும் இன்பம் பெறலாம்" என்று சொல்கிறார். இறைவனைப் பாடும். பணியில் இடைவிடாது ஈடுபட்டு இன்பம் காணும் இயல்புடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/7&oldid=1725510" இலிருந்து மீள்விக்கப்பட்டது