பக்கம்:அருளாளன் 1954.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளின் விளைவு .61 பிறகு சுவாமி தரிசனம் பண்ணிக்கொண்டு வீட்டுக் குப் போய்ச் சேர்ந்தார் சிவாசாரியார். அப்பொழுது மாணாக்கர்கள் மெதுவாக அவரைக் கேட்டார்கள்; "எதற் காகச் சுவாமி இப்படி அழுதீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் பதில் சொல்லலானார். "மூன்றுநாள் இறை வனுடைய திருத்தொண்டைச் செய்யவில்லை என்று தர்ம கர்த்தா அவளை ஒறுத்தார். இப்படி என்னை இளமையி லிருந்து இறைவனுடைய தொண்டு செய்யாததற்காக யாரேனும் ஒறுத்திருந்தால் நான் எப்போதே உய்ந்திருப் பேனே!" என்று சொல்லி மீட்டும் அழுதாராம். அப் பொழுதுதான் அவருடைய உள்ளக் கிடக்கை மாணாக்கர் களுக்குத் தெரிந்தது; மற்றவர்களுக்கும் தெரிந்து எல்லோ லோரும் வியந்தார்கள். இறைவனுக்குத் தொண்டு செய்யும் தாசியைத் தர்ம கர்த்தா ஒறுத்ததற்குக் காரணம். அந்தத் தாசியினிடத் திலே உள்ள கோபம்; அதற்கு ஏது இறைவனுடைய தொண்டு முட்டுப்பட்டதே என்பதுதான். செய்யவேண்டிய கடமையைச் செய்யாகதற்காக ஒறுத்தார். அது அன்பினாலே பிறந்தது. அரதத்த சிவாசாரியார் அந்த ஒறுத்தலைத் தாமும் வேண்டினார். ஒரு தாய் தன்னுடைய குழந்தை ஏதோ தவறு செய்துவிட்டது என்று தெரிந்து அடிக்கிறாள். தாய்க்குக் குழந்தையினிடத்திலே அன்பு இல்லை என்று சொல்லலாமா? அணைப்பதும் ஒரு கை, அடிப்பதும் ஒரு கை" என்பது பழமொழி. இரண்டுக்கும் அன்பே காரணம். குழந்தை தவறு செய்யாமல் நல்ல பிள்ளை என்று பெயர் வாங்க வேண்டுமே என்பதற் காகவே அடிக்கிறாள். தழுவி, முத்தமிட்டு, வேண்டிய தின்பண்டங்களைக் கொடுப்பதும் அன்புதான். தவறு செய்தால் அடிப்பதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/70&oldid=1725572" இலிருந்து மீள்விக்கப்பட்டது