.62 அருளாளன் அன்புதான். இரண்டு வகையும் அன்பாக இருந்தாலும் தோற்றத்தில் அவை வெவ்வேறாகத் தோன்றுகின்றன. ஒன்று கடுமையாகத் தோன்றுகிறது; மற்றொன்று நயமா கத் தோன்றுகின்றது. இந்த இரண்டு வகையான அன்பை யும் மறக்கருணை, அறக்கருணை என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். றைவன் உலகிலுள்ள உயிர்களுக்குத் துன்பத்தைத் தருகிறான்; ஆகையினால் அவன் கடுமையானவன் என்று சொல்லலாமா? இறைவனைக் காட்டிலும் ஆருயிர் களிடத்திலே அன்புடையவர் வேறு யாரும் இல்லை.தாய் நமக்கு ஒரு பிறவியிலேதான் தாயாக இருக்கிறாள். ஒரு பிறவியிலுங் கூட, சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலே தாய்க்கு எத்தனை அன்பு இருக்கிறதோ, அத்தனை அன்பு அந்தக் குழந்தை பெரியவன் ஆன பிறகு இருப்பதில்லை; அன்பு மாறுபடுகிறது. தாய் எப்பொழுதும் நம்மோடு வர முடியாது. எல்லாப் பிறவியிலும் அவள் தாயாக இருப் பதில்லை. இறைவன் ஒருவன்தான் எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கிறான். அவனுடைய அன்பு வேறு யாருக்கும் வராது. அத்தகைய அன்புடைய பெருமான் ஆருயிர்களுக்குத் துன்பத்தைத் தருகிறான்; அதற்கு ஏது அவனுடைய அருள். எப்படித் தவறு செய்த குழந்தையைத் தாய் அடிக்கிறாளோ, அப்படிப் பாவங்கள் செய்த ஆருயிர் களுக்கு அந்தப் பாவத்தின் பயனாகத் தண்டனையைத் தரு கிறான் இறைவன்; துன்பத்தைத் தருகிறான். அழுக்காக இருக்கிற துணியைக் கல்லிலே மோதித் தோய்த்து அதைச் சுத்தப்படுத்துவதுபோல், ஆருயிர்களுடைய மாசுகளைத் துன்பத்தினாலே போக்கிவிடுகிறான்.
பக்கம்:அருளாளன் 1954.pdf/71
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை