அருளின் விளைவு சுடச்சுடப் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு என்பது திருக்குறள். 68 துன்பத்திலே புடமிட்ட உயிர்கள் பொன் புடமிட் டால் மேலும் மேலும் மெருகு அடைந்து ஒளிவிடுவது போல ஒளியை விடுகின் றன. வாழ்க்கையில் வரும் துன்பங்க ளெல்லாம் ஆருயிர்களுடைய மாசுகளைப் போக்குவதற் குரிய தண்டனை என்று கொள்ளவேண்டும். பக்தர் களுக்கும் இறைவன் பல வகையான தண்டனைகளைத் தருகிறான். மற்றவர்களை அடுத்தடுத்து ஒறுக்காமல் இருக் தாலும் பக்தர்களைத்தான் அவன் நிச்சயமாக ஒறுப்பான். தன்னுடைய சொந்தக் குழந்தை தவறு செய்யும்போதுதான் தாய் அடிப்பாள். பக்கத்து வீட்டுக் குழந்தை தவறு செய்தால் அதைப் பற்றி அந்தக் குழந்தையின் தாயினிடம் சொல்வாள்; தான் அடிக்கமாட்டாள். தானாக அடி க்க வேண்டுமானால் தன்னுடைய சொந்தக் குழந்தை என்கிற உரிமை இருக்கவேண்டும். அப்படியே இறைவனுடைய அடியார்களுக்குத்தான் அதிகத் துன்பங்கள் உண்டாகும். உடனுக்குடன் அவர்களுடைய மாசுகளையெல்லாம் போக்கித் தூய்மைப்படுத்தவேண்டும் என்ற அருளினாலே இறைவன் அப்படிச் செய்கிறான். இல்லாவிட்டால் அந்த அழுக்கை யெல்லாம் ஒருசோச் சேர்த்து வைத்து, உரிய தண்டனையை மறுமையிலே அவன் கொடுத்துவிடுவான். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுடைய அருளினால் விளைகின்ற விளைவுகளை நினைத்துப் பார்க்கிறார். அடி யார்கள் துன்பப்படுவது எதனாலே என்று யோசிக்கிறார். இறைவன் அடியார்களை ஒறுக்கிறான். அப்படி ஒறுப் பதற்குக் காரணம் அடியார்களிடத்திலே உள்ள கோபம் அன்று; அவர்களிடத்திலே உள்ள மாசைப் போக்குவதற்
பக்கம்:அருளாளன் 1954.pdf/72
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை