பக்கம்:அருளாளன் 1954.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் . அருளின் விளைவு 65% கொடுத்துக்கொண்டிருந்தால் அதற்கு எல்லையே இராது. அத்தனை குற்றம் செய்துகொண்டிருக்கிறோம். ஆனாலும் குற்றம் செய்துகொண்டே போனால் அதற்கு ஒரு விளைவும் இல்லாமல் இருக்குமாயின் நமக்கு அறிவு வராது. அதனால் ஓரளவு ஒறுத்து அறிவூட்டுகிறான். பெரும்பாலும் நம் குற்றங்களை அவன் மறந்து மன்னித்துவிடுகிறான். அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய். நமக்கு இறைவன் கொடுக்கிற துன்பம் ஓரளவுக் குள்ளேதான் இருக்கிறது. நம்மிடத்திலே காட்டுகின்ற கருணைக்கு அளவே இல்லை. அவனாலே பொறுக்கப்பெற்ற குற்றங்களுக்கும் அளவில்லை, அவை எத்தனையோ உண்டு; அனைத்தையும் பொறுத்தருள்கிறான். பிழைத்தனகள் பொறுத்தாய் எத்தனையும். துன்பங்கள் அடுத்தடுத்து வருகின்றன. அவற்றை அநுபவிக்கையில் அப்பொழுதப்பொழுது இறைவன்: நம்மைச் சீறுகிறான் என்று தோன்றுகிறது. நம்மிடத்தில் இத்தனை சிரத்தை கொண்டு அவ்வப்பொழுது திருத்து கிறானே என்று நினைப்பதுதான் முறை. அன்பர்கள். அப்படித்தான் எண்ணுவார்கள். v ஒரு பெண் தன்னுடைய கணவனாலே புறக்கணிக்கப் பட்டிருக்கிறாள். மாமனார் மாமியார் முதலியவர்களோடு அவள் இருக்கிறாள். அவன் வருகிறான்; சாப்பிடுகிறான்; போய்விடுகிறான். அந்தப் பெண்ணோடு பேசுவது இல்லை. இப்படி இருக்கும்பொழுது ஒரு நாள் ஏதோ ஒரு சிறு குற்றம் செய்ததற்காக அவனுக்குக் கோபம் வந்துவிடுகிறது. அவளை அடித்துவிடுகிறான்; அடித்துவிட்டுப் போய்விடு கிறான்.மற்ற நாளெல்லாம் வாட்டத்துடன் இருக்கிற 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/74&oldid=1725576" இலிருந்து மீள்விக்கப்பட்டது