பக்கம்:அருளாளன் 1954.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அருளாளன். விலக வேண்டி இருக்க, என்னையும் உன் அருளுக்கு உரிய பொருளாக நினைத்து என்னைத் திருத்தவேண்டும் என்று எண்ணினாய். அதனால் அவ்வப்பொழுது என் னைச் செறுத்தாய்; என்னிடத்திலே கோபங் கொண்டாய். உன்னுடைய கோபம் என்னுடைய லாபம்." நாயிளேனைப் பொருட்படுத்திச் செறுத்தாய். நல்ல பொருளிடத்திலே உறவாடுவது மக்களுக்கு இயல்பு. நல்லது அல்லாததானால் அதனிடத்தில் உள்ள தீங்கு தம்மிடத்தில் ஒட்டிக்கொள்ளுமே என்று அஞ்சு வார்கள். இறைவனோ எந்த விதமான தீங்கினாலும் துன் புறாதவன்; மிக மிக இழிந்த அழுக்குகளையும் மாற்று கின்ற தூய உருவமாக இருக்கிறவன். பெரு நெருப்புக்கு ஈரம் இல்லை. ஆதலினால் அவன் குற்றம் உள்ள ஆருயிர் களைத் திருத்துவதற்காக அவர்களை அணுகுகிறான். எவை எவை மற்றவர்கள் அஞ்சி விலகுவதற்குரியன என்று நினைக்கிறார்களோ அவைகளெல்லாம் இறைவனுக்கு அணுகுவதற்குரிய பொருள்களாகின்றன.

தேவர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்வு நீடிக்க வேண்டும் என்று கருதியும், மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வேண்டுமென்று கருதியும் அமுதத்தை உண்டார்கள். அவர்கள் வேண்டி உண்ட உணவு அது. ஆனால் இறைவனோ நஞ்சை உண்டான். அந்த நஞ்சினாலே தனக்குத் துன்பம் வரும் என்ற நினைப்பே அவனுக்கு இல்லை. ஆலகால விடத்தின் காற்றுத் தம் மேல் பட்டாலும் இறந்துபடக் கூடியவர்கள் தேவர்கள். பாற் கடலில் விடம் தோன்றியபொழுது அவர்கள் ஆண்டவனிடத்திலே வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/77&oldid=1725579" இலிருந்து மீள்விக்கப்பட்டது