பக்கம்:அருளாளன் 1954.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளின் விளைவு 69 முறையிட்டுக்கொண்டார்கள். உடனே அதைக் கையிலே எடுத்துக்கொண்டு, "இதை நாம் உண்ணுகிறோம்; இதனால் நமக்குத் துன்பம் இருக்குமா.இராதா?" என்றெல்லாம் யோசிக்காமலே உண்டுவிட்டான். நல்ல பொருளை மாத்திரம் கொள்ளுவது பிறருடைய இயல்பு. அல்லாத பொருளானாலும் அது அல்லாதது என்ற நினைவுகூட இல்லாமல் ஆண்டவன் ஏற்றுக்கொள்ளுவான். . பாற்கடலிலே தோன்றிய ஆலகால விடத்தை, அது தனக்குத் துன்பம் தரும் என்பதைச் சிறிதேனும் அறியாமல் இறைவன் நுகர்ந்தான் என்பதை இன்றைக்கும் காட்டிக்கொண்டு நிற்கிறது இறைவனுடைய நீல கண்டம். வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம் கறுத்தாய். இறைவனுடைய கருணையை என்னவென்று சொல் வது 1 எல்லாரும் அஞ்சக்கூடிய ஆலகால விடத்தையே எடுத்து உண்டான் என்றால், குற்றங்கள் செய்கின்ற ஆருயிர்களை அணுகி அவர்களைக் காப்பாற்றுவது பெரிய காரியமா? 'என்னைப் போன்ற குற்றம் உடையவர்களைக் காப்பாற்றுவதற்காக முன்பே நீ நஞ்சை உண்டு பயிற்சி பண்ணிக்கொண்டாய் போலத் தோன்றுகிறது' என்ற கருத்தும் இங்கே புலப்படுகிறது. தன் கண்டம் கறுத் தாலும் நஞ்சை அங்கே வைத்திருக்கிறான் இறைவன் அவனைச் சார்ந்தவர்கள் முன்னை நிலை எப்படி இருப்பினும் உயர்வை அடைவார்கள் என்பதைக் காட்டுவது அது.*

  • பஞ்செனச் சிலக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவ, வஞ்சனுக்

கிளைய என்னை வானை அருள்செய் தானே, தஞ்செனக் கருதி னானோ தாழ்சடைக் கடவுள் உண்ட, நஞ்செனத் தகையன் அன்றோ நாயகன் அருளில் நாயேன்" (வீடணன் அடைக்கலப் படலம்) என்ற கம்பர் பாடல் இங்கே நினைப்பதற் சூரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/78&oldid=1725580" இலிருந்து மீள்விக்கப்பட்டது