பக்கம்:அருளாளன் 1954.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. vii வராதலின், "நீ என்னைப் புறக்கணித்தாலும் பாடுதலை ஒழி யேன்" என்று சொல்கிறார். "உன்னைப் பாடும் பாடல் ஒவ் வொன்றும் புதிய புதிய சுவை பெற்று இனிக்கின்றது" என்று மகிழ்கிறார். இயற்கையின் எழில் நலங்களைக் கண்டு அதனை எடுத்துச் சொல்லும் வகையிலும் சுந்தரர் சிறந்து நிற்கிறார். நிவா என்னும் ஆற்றைக் கவ்வாய் அகிலும் கதிர் மாமணியும் கலந்து உந்தி வரும். நதியாகக் காட்டுகிறார். அரிசில் என்னும் ஆறு, 'இரும்புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இருகரையும் பொருது அலைக்கும்" இயல்புடையதாகக் காட்சி தருகிறது. திருக்கலய நல் லூரில் உள்ள பொழிவில் வளரும் புன்னையை, 'கரும்புனை வெண் முத்து அரும்பிப் பொன் மலர்ந்து பவளக் கவின் காட்டும்' நிலை யில் காட்டுகிறார். திருக்கருப்பறியலூரில், வேலிதோறும் கருக் தாள வாழைமேற் செங்கனிகள் தேன் சொரியும் வளப்பமான காட்சி ஒன்றைச் சொல்லால் சித்திரிக்கிறார். . பித்தன், பிறை சூடி, அத்தன், நிலவெண்மதி சூடிய நின் மவன், நம்பி, புனிதன், கண்ணுதலோன், மெய்ப் பொருள், ஏறு, கண்டம் கறுத்தவன். எந்தை என்ற இறைவன் திருநாமங்களை எடுத்தாளுகிறார். இறைவன் பிறை சூடியது, கங்கையைச் சடை யில் தாங்கியது, அரவைப் பூணாகவும் நாணாகவும் அணிந்தது, புறங்காட்டில் ஆடியது, முருகனை அவதாரம் செய்யச் செய்தது, காமனை எரித்தது, விடம் உண்டது ஆகிய செயல்களைக்கூறுகிறார். விநாயகரைப் பற்றிய செய்தி ஒரு பாட்டிலும், முருகனைப் பற்றிய செய்தி இரண்டு பாடல்களிலும், அம்மையைப் பற்றிய செய்தி இரண்டு பாடல்களிலும் வருகின்றன. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் முழு வதையும் குறிப்புரையுடன், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் வர்களின் திருவுள்ளப்படி 1949 ஆம்- ஆண்டில் வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அத்தேவாரத்தில் உள்ள சில செய்யுட்களுக்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/8&oldid=1725511" இலிருந்து மீள்விக்கப்பட்டது