பக்கம்:அருளாளன் 1954.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாழ் இனிமை 75 வாங்க வேண்டிய அவசியம் இல்லையே! இறைவனுடைய ஆணையினால் பாமாலை பாடுவதற்காகவே தம்முடைய வாழ்வை ஈடுபடுத்தியவர் அவர்: சொன்மாலை பாடுக என்று இறைவனே விரும்பிப் பணித்த பெருமையை உடையவர். அவர் பாடுகிறார். பாடும் பொழுது புதிய புதிய மாலை களைப் பாடுகிறார். வேறு ஒரு தலத்திலே பாடிய பாடலை இங்கே பாடித் தலத்தின் பேரை மாத்திரம் மாற்றுகிறாரா? இல்லை. அவருக்குப் புதிய புதிய கற்பனைகள் தோன்றுகின் றன. புதிய புதிய சிந்தனைகள் எழுகின்றன. புதிய புதிய பாடல்கள் மலர்கின்றன. எம்பெருமானுடைய பெரு மையைப் புதிய பதிய முறையிலே அமைத்துப் பாடுகிறார். வெறும் சொற்களின் கூட்டமே கவிதை ஆக இருந் தால் புதுமை இராது. எல்லாச் சொற்களும் முன்புள்ள புலவர்களால் ஆளப் பெற்றவையே, வெறும் சொல்லிலே மாத்திரம் கவிதை இல்லை. சொற் கூட்டத்தினூடே உள்ள உயிராகிய உணர்ச்சியிலேதான் கவிப் பண்பு இருக்கிறது. வெறும் சொற் கூட்டத்திலே கவி இருக்குமானால் அகராதி ஒன்றே போதுமே! சொற்களையெல்லாம் கோவைப் படுத்தி உணர்ச்சி துள்ளும்படியாக ஆக்குவது கவிதை. ஒவ்வொரு முறையும் அது புதிதாக இருக்கும். தொழிலாளி ஒரு பொருளை இயற்றினால் மீட்டும் மீட்டும் ஒரேமாதிரி செய்வான். குயவன் ஒருவன் மண் பாண்டத்தை வனைகிறான். அவன் வனைகிற பாண்டம் ஒரே மாதிரி இருக்கும். லட்சக்கணக்கான பாண்டங்களை அவன் படைத்தாலுங்கூட எல்லாப் பாண்டங்களும் ஒரு மாதிரியே இருக்கும். ஆனால் கலைஞனுடைய படைப்பே வேறு. அவன் ஒரு கணம் செய்த படைப்பை மீட்டும் செய்யமாட்டான். ஒவ்வொரு கணமும் அவன் படைப்பில் புதுமைதோன்றும். நான்முகன் ஒரு பெரும் கலைஞன். எவ்வளவோ காலமாக மனிதர்களைச் சிருஷ்டித்து வருகிறான். பல இடங்களிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/84&oldid=1725586" இலிருந்து மீள்விக்கப்பட்டது