பக்கம்:அருளாளன் 1954.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அருளாளன் மக்கள் வாழ்கிறார்கள். இருந்தாலும் ஒருவருடைய முகத் தைப்போல வேறு ஒருவருடைய முகம் இருப்பதில்லை. ஒவ் வொன்றிலும் ஒரு புதுமை. கலைஞனிடத்தில்தான் இந்தப் புதுமையைக் காணமுடியும். கவிதையிலுள்ள சொற்கள் முன்னாலே பல கவிஞர்கள் எடுத்தாண்ட சொற்களாக இருந்தாலும் அவற்றின் கோவையில், புதிதாகப் புகுத்திய உணர்ச்சியில், புதுமை தோன்றுகிறது. அதனால் பொழுது பாடுகிற பாட்டு அன்றலர்ந்த நாண் மலர்போல விளங்குகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் பாடுகிற ஒவ் வொரு பாட்டும் புதுமைச் சுவையோடு இருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார் அழகான வாழைக் கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூரில் கொகுடிக் கோயிலில் கோல்வளையாளோடும் இருப்பவனாகிய எம்பெருமானைத் தரிசித்துப் பாட ஆரம்பிக்கிறார். பாட்டைப் பாடுபவர் பழைய சுந்தரமூர்த்தி நாயனார்; பழைய பரமசிவனையே பாடுகிறார். ஆனால் பாட்டுப் புதியதாக வருகிறது; விருந்தாக வருகிறது (விருந்து-- புதுமை). சொற்களாகிய மலர்களைத் தொடுத்த புதிய மாலை அது. . அதைப் பாடும் பொழுது அவருக்கு அலுப்பு உண் டாகவில்லை. எத்தனையோ தலங்களுக்குச் சென்று எவ் வளவோ காலமாகப் பாடி வருகிறவர் அவர். ஆயினும் இப் போது பாடும் அந்தப் பாட்டில் ஒரு புதுமைச் சுவை இருக்கிறது. பாடுகிறவருக்கும் சுவை பிறக்கிறது: பாட் டைக் கேட்கிறவருக்கும் சுவை பிறக்கிறது. கேட்கின்ற சிவபெருமானுக்கு மாத்திரமல்ல; இன்றளவும் அந்தப் பாட்டை எத்தனையோ மக்கள் கேட்டு அறிந்து உணர்ந்து இன்புற்றிருக்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் அது புதிய தாக இருக்கிறது. ஒரு பாட்டு மற்றொரு பாட்டினும் புதி யது என்பது மாத்திரமல்ல, ஒரு பாட்டையே பல முறை படித்தாலும் புதுமை தோற்றிக் கொண்டே இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/85&oldid=1725587" இலிருந்து மீள்விக்கப்பட்டது