பக்கம்:அருளாளன் 1954.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii கேனும் இப்போது விளக்கம் எழுதும்படி திருவருள் கூட்டு வித்ததை எண்ணி இன்புறுகிறேன். திருமுறை மலர்கள் என்ற வரிசையில் இது ஏழாவது மலர். இதனுடன் தேவாரப் பாடல் விளக்கம் நிறைவேறுகிறது. இந்தப் புத்தகங்களைத் தமிழ் அன்பர்கள் மிக்க ஆவலோடு பெற்றுப் படித்து இன்புறுவதை அவர்கள் எழுதும் கடிதங்களிலிருந்து தெரிந்துகொள்கிறேன். சிறப்பாக இலங்கைத் தமிழர்கள் இவ் வெளியீடுகளுக்கு அளித்துவரும் ஆதரவு மிகப் பாராட்டுவதற்குரி யது, அவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக்கொள் கிறேன். தேவாரங்களுக்கு விளக்கம் கூறுவதற்கு நிறைந்த புலமை வேண்டும்; இறைவன் திருவருள் அநுபவம் வேண்டும். இத் தகுதிகள் என்பால் இல்லையென்பதை நான் நன்கு உணர்வேன். ஆயினும் தேவாரப் பாடல்களைப் பலகால் படித்துப் படித்து இன் புறும் வழக்கத்தாலும், என்னுடைய ஆசிரியப் பெருமாளுகிய மகர மகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் பல தேவாரப் பாடல் களில் உள்ள நுட்பங்களைச் சொல்லக் கேட்கும் பேறு பெற்ற தாலும் இந்த முயற்சியில் ஈடுபட்டேன். முழுவதும் திருத்தமாகச் செய்வது மனித இயல்புக்கு அப்பாற்பட்டது. அவரவர்களின் அறிவு எல்லைக்கு உட்பட்டே அவரவர்கள் மேற்கொண்ட செயல் கள் நிறைவேறும். இந்த மட்டிலேனும் ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்படி முருகன் திருவருள் என்னைச் செலுத்தியதே என்று நினைந்து அப்பெருமானை வாழ்த்துகிறேன். மற்ற ஐந்து திருமுறைகளிலுமுள்ள பாடல்களின் விளக் கங்கள் அடுத்தடுத்து வெளிவரும். கல்யாணபுரம் மயிலாப்பூர்] கி.வா.ஜகந்தாதன் 3-12-54.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/9&oldid=1725515" இலிருந்து மீள்விக்கப்பட்டது