பக்கம்:அருளாளன் 1954.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மை மறுமைப் பயன் 81 கேட்டார். கிடைக்கவில்லை. சிறிது கோபம் உண்டா யிற்று. சண்டித்தனம் பண்ணும் பிள்ளை வீதியிலே படுத்துக்கொள்வது போல அந்த இடத்திலே படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார். அப்பொழுது கோயிலில் திருப்பணி நடந்துகொண்டிருந்தது. செங்கற்களைக் கொண்டு வந்து அடுக்கி யிருந்தார்கள். இரண்டு செங்கல்லை எடுத்தார்; தலைக்கு அணையாக வைத்துக்கொண்டார்; துண்டை விரித்துப் போட்டார்; அப்படியே படுத்தார். அயர்ச்சியினாலே தூங்கிவிட்டார். . தூக்கத்தினின்று விழித்தார். எழுந்து துண்டை உதறினார். தலை மாட்டில் வைத்திருந்த செங்கல்லைப் பார்த்தால் அது பொன்னாக இருந்தது. அப்பொழுது அவர் உள்ளத்திலே உண்டான உவகைக்கு அளவு உண்டா? உடம்பெல்லாம் புல்லரித்தது. 'நாம் நம்முடைய ஆண்டவனைக் கோபித்துக் கொண்டோமே. கல்லைப் பொன்னாக்குகின்ற னாக்குகின்ற பெருமான் அல்லவா? நம்முடைய குறிப்பறிந்து வேண்டியதைத் தந்துவிட்டானே! என்று அவர் துள்ளிக் குதித்தார். உடனே, "என்னுடைய பெருமை இது.- எனக்காக எனக்காக ஆண்டவன் தந்தான் என்று சொல்லிக்கொள்ளத் தோன்றவில்லை."அடடா! உலகில் குறையுடைய மக்களைப் போய், எனக்கு அது வேண்டும், இதுவேண்டும் என்று புலவர்கள் பாடுகிறார்களே; இப்படி ஒரு கற்பகம், காமதேனு, குறிப்பறிந்து தருகின்ற பெரு வள்ளல் இருக்கும்போது அவனைப் பாடாமல் யார் யாரையோ பாடுகிறார்களே! என்று புலவர்களை நினைந்து இரக்கம் உண்டாயிற்று. உடனே ஒரு புலவர் மகா சபைக்கு முன்னாலே பேசுவதுபோலக் கற்பனை செய்து கொண்டார். பாட ஆரம்பித்தார். "பைத்தியக்காரப் புலவர்களே! யார் யார் யாரையோ .. போய்ப் பாடுகி றீர்களே!! எங்களுடைய ஆண்டவனைப் 6'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/90&oldid=1725592" இலிருந்து மீள்விக்கப்பட்டது