பக்கம்:அருளாளன் 1954.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அருளாளன் பாடுங்கள்; எல்லாம் கிடை க கு ம் என்று பாட லானார்.

ஒரு புலவன் செல்வர் ஒருவரிடம் சென்றான். கற் பகமே, காமதேனுவே என்று புகழ்ந்தான். "உங்களுடைய குடும்பமே உயர்ந்த குடும்பம்; உங்களுடைய தந்தையார் முதலியவர்களெல்லாம் உங்களுக்கு ஆசி கூற, அவர் களுடைய முயற்சியினாலும் உங்கள் முயற்சியினாலும் சிறந்த நிலைக்கு வந்தீர்கள்" என்று புகழ்ந்தான்.சட் டென்று அந்தச் செல்வர் அவன் பேச்சை நிறுத்தினார். "ஓய்! நீர் என்னுடைய தகப்பனாரைக் கண்டீரா? அவர் பரம ஏழையல்லவா? என்னுடைய சொந்த முயற்சி யினால் அல்லவா நான் முன்னுக்கு வந்தேன்? எதற்கு மற்றவர்களையெல்லாம் சொல்கிறீர்?" என்று கோபத் தோடு கேட்டார். அப்பொழுதுதான் புலவனுக்கு உண்மை விளங்கியது. தாமாகவே எல்லாவற்றையும் ஈட்டியதாகச் சொல்லவேண்டும் என்பது அவர் நினைப்பு. என்று. தெரிய வந்தது. புலவன் பாடும் புகழில், இம்மியும் பிறரைச் சாரக்கூடாதாம்! அத்தனை புகழுக்கும் தனி யுரிமை படைத்தவராக வேண்டும் என்று அந்தச் செல்வர் நினைத்தார். அதனைத் தெரிந்துகொண்டு மறுபடியும் இச்சகம் பேசி, "அடடா! நீங்கள் அசகாய சூரர் அல்லவா? நீங்களாகச் சம்பாதித்துக் கொண்ட செல்வம், நீங்களாகப் பெற்றுக்கொண்ட புகழ்" என்று பாடினான் புலவன். கடைசியில். பாட்டு நன்றாயிருக்கிறது; போய்விட்டு வாரும்" என்று அந்தச் செல்வர் சொல்லி அனுப்பிவிட்டார்.

இது புலவர்களுடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சி. செல்வர்களைக் கண்டு வேறு யாரையும் புகழாமல் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/91&oldid=1725593" இலிருந்து மீள்விக்கப்பட்டது