இம்மை மறுமைப் பயன் 83 களையே புகழ்ந்து, எல்லாப் புகழையும் அவர்களுக்கே உரியது ஆக்கிவிட்டு இச்சகம் பேசினாலுங்கூட ஏழைத் தொண்டர்களுக்குத் தரமாட்டார்கள் அவர்கள். அவர் களைப் போய் எதற்காகப் பாடவேண்டும்? தம்மை யேபுகழ்ந்து இச்சை பேசினும் சார்வி னும்தொண்டர்த் தருகிலா பொய்ம்மை யாளரைப் பாடாதே. (வேறு யாரையும் புகழாமல் தம்மையே புகழ்ந்து தமக்கு விருப்பமானபடியெல்லாம் சொன்னாலும், அண்டி நின்றாலும் தொண்டர்களுக்கு எதையும் வழங்காத பொய்யர்களைப் பாடர்மல்.] இச்சை பேசினாலும் எப்போதும் அடுத்தடுத்துப் பயின்றாலும் கொடுக்காதவர்கள் பொய்யர்கள். இறை வனுடைய திருவருளினாலே தமக்குக் கிடைத்த பொருளைப் பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற நினைவே இல்லாமல் "இது நமக்கே உரியது' என்று நினைக்கிறவர்கள் அவர்கள். அந்தப் பணமும் நிலையாதது; அவர்களும் நிலையாதவர்கள். அவர்கள் பொய்ம்மையாளர். அவர்களைப் புகழலாமா? உண்மையாக ஒரு காரியத்தைச் செய்கிறவர்களைப் புகழ்கின்ற புகழ்தான் உண்மையானது; பொருளுடையது. புகழுக்கு உரியவன் யார்? உண்மையான வேலை செய் கிறவன் எவனோ அவன் தான் புகழுக்கு உரியவன். யாரோ ஒருவன் வெளியூரிலிருந்து நமக்கு உதவி செய்யவேண்டும் என்ற நினைவினால் நினைவினால் பணம் அனுப்புகிறான். அதைக் கொண்டு வந்து தபால்காரன் தருகிறான். தரும்பொழுது, 'என்னுடைய குறையைப் போக்குவதற்குப் பெருவள்ள லாக நீ வந்து உதவுகிறாய்" என்று அந்தத் தபால்காரன் காலையா பிடித்துக் கொள்வது F யார் நமக்குப் பணம்
பக்கம்:அருளாளன் 1954.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை