பக்கம்:அருளாளன் 1954.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மை மறுமைப் பயன் 85. 'செல்வரைப் பாடினால் எனக்கு வேண்டிய பொரு ளெல்லாம் கிடைக்குமே" என்று கேட்டால், "எம்பெரு மானும் வேண்டியதைக் கொடுப்பான்" என்று சுந்தரர் சொல்கிறார். எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்! இம்மை யேதரும் சோறும் கூறையும். "என் தகப்பன், எனக்கு வேண்டிய செல்வத்தை யெல்லாம் தான் சம்பாதித்து எனக்கு அளிக்கின்ற பேரரு ளாளன், புகலூரில் இருக்கிறான். அந்தப் புகலூருக்குச் சென்று பாடுங்கள்" நாள் இப்பொழுது ஒரு செல்வனைப் பாடிக்கொண் டிருக்கிறேன். அவன் எனக்கு எல்லாவற்றையும் தருகிறான். இறைவனைப் போய்ப் பாடினால் கிடைக்கும்?" என்ற கேள்வி எழுகிறது. '. என்ன இந்த உலகில் நமக்கு வேண்டுவன் சோறும் கூதை யும்; சாப்பாடும் உடையும். ஆண்டவன் நல்ல உணவும் நல்ல உடையும் கொடுப்பான்." . ஆண்டவனை நினைந்தால் மறுமையிலேதான் சொர்க்கம் என்றும், இம்மையிலே சோற்றுக்குத் தாளம் போட வேண்டும் என்றும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின் றனர். இறைவனிடத்தில் உண்மையான நம்பிக்கை உடையல். னுக்கு மனம் தூயதாக இருக்கும். அவனுடைய செயல் களும் உரைகளும் எண்ணங்களும் அன்பின் விளைவாக இருக்கும். அன்புடையவர்களை எல்லாரும் தமக்கு அன்ப ராகப் பாவிப்பார்கள். பகைஞன்கூட அவனைச் சார்வான். அதனால் பல நன்மைகள் உண்டாகும். ஆகையினால் இறைவனிடத்திலே அன்புடையவனுக்கு இந்த உலகத். திலேயே வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கும். இம்மை யேதரும் சோறும் கூறையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/94&oldid=1725596" இலிருந்து மீள்விக்கப்பட்டது