பக்கம்:அருளாளன் 1954.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 44 அருளாளன் நான் பாடுகிற செல்வனிடத்தி லிருந்தே அவை கிடைக்கின்றனவே. அதை ஏன் மாற்றவேண்டும்? இருக்கிறபடியே இருந்து நான் அவனையே பாடுகிறேன்." 46 இந்த உலகத்தில் நல்ல வசதிகள் கிடைக்கும்; வருகிற துன்பங்கள் விலகும். அடுத்த உலகத்திலே யாரும் கொடுக்க முடியாத ஓர் இன்பத்தை இறைவன் தருவான்." இடர் கெடலும்ஆம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுற வில்லையே. இப் பிறவிக்குப் பின் இறைவனுடைய அணுக்கத் தொண்டராக இருந்து பேரின்பத்தை அடையலாம். இறை வணங்குவதனாலே இம்மைப் பயனும் மறுமைப் வனை பயனும் வரும். அது எப்படி வரும்? ஆண்டவனை நம்பினால் குடும்பம் முதலியவற்றைக் கவனிக்க முடியமா?" என்ற ஐயப்பாடு ழலாம். ஆண்டவனை நம்பினவர்களெல்லாம் குடும்பம் இல்லாமலா இருக்கிறார்கள்? சுந்தரமூர்த்தி. சுவாமி. களுடைய வரலாற்றையே பார்க்கலாமே. அவர் ஒரு மனைவிக்கு இரண்டு மனைவிகளை மணம் செய்துகொண் டார். அடியார்களுக் கெல்லாம் விருந்து அருத்தி இன்பத்தை அடைந்தார். அவர் துறவியாகப் போகவில்லை. அவருடைய வாழ்க்கையிலே மிக்க இன்பம் உண்டாயிற்று. மனம் தூய்மையாக இருந்தால் எல்லாரிடத்திலும் அன்பாகப் பழகத் தோன்றும். அதனால் உலகமே நமக் குப் பலமாக இருக்கும். இறைவனுடைய நினைவு, பக்தி அந்தத் தூய்மையை உள்ளத்தில் உண்டாக்கும். வருகின்ற துன்பங்களை யெல்லாம் அடியோடு நீக்கிப் பாதுகாக்கின்ற ஆற்றல் இறைவன் ஒருவனுக்குத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/95&oldid=1725597" இலிருந்து மீள்விக்கப்பட்டது