பக்கம்:அருளாளன் 1954.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மை மறுமைப் பயன் 87 உண்டு. மற்ற யாரை நம்பினாலும் அவரவர்கள் தங்க ளிடத்திலே உள்ள குறைகளைச் சொல்லிக் கொள்வார்கள். அவர்களுடைய வாழ்விலே இடர்கள் உண்டு. அவற் றையே போக்கமாட்டாதவர்கள் தம்மை அண்டுவாருடைய டரை எப்படிப் போக்குவார்கள்? இடரிலாப் பெருமானா கிய ஆண்டவன் ஒருவன்தான் எல்லாவிதமான குறையை யும் இடர்களையும் போக்கவல்லவன். அவனை ஏத்திக் கொண்டே இருந்தால் நமக்கு உள்ள இடர்களெல்லாம் கெடும். இந்தப் பிறவி மாறினால் இறைவனுடைய அணுக் கத் தொண்டராகிச் சிவலோக வாழ்வைப் பெறலாம். க். ஒருகால் இம்மையே தரும் சோறும் கூறையும் என்பதில் ஐயப்பாடு இருந்தாலும் இருக்கலாம்; அம்மையில் சிவலோகப் பதவி கிடைக்கும், இறைவனோடு ஒன்றுபட்டு வாழும் இன்பம் கிடைக்கும் என்பதில் சற்றும் ஐயம் இல்லை. அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுற வில்லையே ! இவ்வாறு புலவர்களை நோக்கிச் சுந்தரமூர்த்தி நாயனார் றுகிறார். அவர் பெரிய புலவர்; இறைவனை யன்றி வேறு ஒன்றையும் எண்ணாத புலவர்; இறைவனைக் காட்டிலும் பெரு வள்ளல் இல்லை என்ற நிச்சயத்தோடு வாழ்ந்த புலவர். தம்மை யேபுகழ்ந்து இச்சை பேசினும் சார்வி னுந்தொண்டர்த் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்! இம்மை யேதரும் சோறும் கூறையும்; ஏத்த லாம்; இடர் கெடலும்ஆம்; அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/96&oldid=1725598" இலிருந்து மீள்விக்கப்பட்டது