இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
.88 அருளானன். [தம்மையே புகழ்ந்து தமக்கு விருப்பமான சொற்களைச் சொன்னாலும் சார்வு இருந்தாலும் தொண்டர்களுக்குத் தராத பொய்யான செல்வர்களைப் பாடாமல்,எம் தந்தையாகிய இறை வன புகலூரைப் பாடுங்கள், புலவர்களே! இப்பிறவி பிலேயே உணவையும் உடையையும் இறைவன் தருவான்; அவனை மேலும் மேலும் துதித்துக் கொண்டிருக்கலாம்; நமக்கு வறாம் துன்பங்கள் அழிந்து போகும்; மறு பிறவியிலே சிவலோசு வாழ்வு பெறுவதற்குச் சிறிதும் சந்தேகமே இல்லை. . . இச்சை - விருப்பமானவை.சார்வு -அண்டி நிற்றல், சார் வினும் - அண்டி நிற்றலாலும், தொண்டர்-அன்பர்களுக்கு. பாடாதே- பாடாமல். புகலூர் - சோழ நாட்டில் உள்ள தலம். இத்தலத்தில் பூதேசுவரம், வர்த்தமானேசுவரம், பவிஷ்யேசுவரம் என்ற மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கூறை ஆடை. அம்மை. இப் பிறவிக்கு அடுத்த பிறவி. ஐயுறவு- சந்தேகம்.] யாதும் சிறிதும்.