பக்கம்:அருளாளர்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. திருவிளையாடலும், பரஞ்சோதியாரும்

இன்று பெரு வழக்காக இருப்பது பரஞ் சோதியாருடைய திருவிளையாடல்தான். பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடல் அருகித் தான் படிக்கப்படுகிறது. இந்த இரண்டு திருவிளையாடல் களிலும் என்ன காரணத்தாலோ பல வேறுபாடுகள் இருக்கின்றன. பரஞ்சோதியார் திருவிளையாடலைப் பொறுத்தமட்டில் மூன்று காண்டங்களாக அமைந்து உள்ளது. திருவாலவாய்க் காண்டம்; கூடல் காண்டம்; மதுரைக் காண்டம் என்று மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது. 3363 விருத்தப்பாக்களை உடைய பரஞ்சோதியாருடைய திருவிளையாடலிலும் 64படலங்கள் தான் உள்ளன. ஆனால் பல திருவிளையாடல்கள் பரஞ்சோதியார் சொன்ன பெயரில் நம்பியால் சொல்லப் படவில்லை; அவர் சொன்ன பெயரில் இவரால் சொல்லப்படவில்லை. அதுமட்டுமல்ல. சில புதிய திருவிளையாடல்ளை பெரும்பற்றப் புலியூர் நம்பி பேசுகிறார். அவை பரஞ்சோதியின் திருவிளையாடலில் காணப்படவில்லை. இதற்கு என்ன காரண மென்று நம்மால் சொல்ல முடியவில்லை. முக்கியமாக, 'புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி'என்று மாணிக்க வாசகப் பெருமான் தம்முடைய திருவாசகத்திலே கூறுகிறார். புலி முலையை மானுக்கு ஊட்டியதாக ஒரு திருவிளையாடல் கதை. இதைப் பரஞ்சோதியார் பாடவில்லை. ஆனால் நம்பி திருவிளையாடலில் இது காணப்படுகிறது. மூர்த்தியாருக்கு அரசளித்தது, காரியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/116&oldid=1291590" இலிருந்து மீள்விக்கப்பட்டது