பக்கம்:அருளாளர்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 * அருளாளர்கள்


அடியவன் தனக்கென்று எதையும் கருதுவதில்லை. பாண்டியன் தன்னை அவமானம் செய்ததாக இடைக்காடன் கருதவில்லை. அதற்குப் பதிலாக தமிழ்ப் பாட்டைக் குறை கூறிவிட்டான்; தமிழ்ப் பாட்டைக் குறை கூறினான் என்றால் அது ஆண்டவனைக் குறை கூறுவதாகும் என்று ஆண்டவனிடத்திலே வந்து முறையிடுகிறான், என்று சொல்லுகின்ற முறையில் இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலத்தில் சொல்கிறார்.

  இராஜசேகர பாண்டியன் என்று ஒர் அரசன் இருந்தான். அவன் அறுபத்தி நான்கு கலைகளிலே அறுபத்தி மூன்றைக் கற்றுவிட்டான். ஒன்றை மட்டும் விட்டு விட்டான். கற்றுக் கொள்ள முடியாமல் அல்ல. எம்பெருமான் நடனம் ஆடுகிறான்; எனவே அந்தக் கலையைத் தான் கற்றுக் கொண்டால் இறைவனுக்கு அபச்சாரம் என்று அவனுக்கு எண்ணம். ஆகவே 63 கலைகளைக் கற்று விட்டு பரதத்தை மட்டும் கல்லாமல் விட்டு விட்டான். சோழ நாட்டிலிருந்து ஒரு புலவன் போனான். அவனை உபசரித்தான் பாண்டியன். அந்தப் புலவன் சொன்னான், எங்களுடைய கரிகாலனுக்கு அறுபத்தி நான்கு கலைகளும் தெரியும், உனக்கு ஒன்று குறைச்சல் தானே என்று. அப்போதுதான் பாண்டியனுக்கு உரைத்தது. உடனே பரத நூல் புலவர்களை வரவழைத்து பரதம் கற்றுக் கொண்டான் வயது முதிர்ந்த நிலையிலே ஆனால் உடனே உடம்பு வலி தாங்க முடியவில்லை, பரதம் கற்றுக் கொண்டதன் பயனாக இந்த நிலையிலே கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவன் உடம்பில் வலி வந்தவுடன் என்ன நினைக்கிறான். வெள்ளியம் பலத்திலே ஆடுகின்ற நடராசனை நினைக்கிறான். ஒரு நாளைக்குச் சில மணி நேரம் பரதம் பயில்வதாலேயே எனக்கு இவ்வளவு உடம்பு வலி வந்ததே, யுகாந்த
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/139&oldid=1291899" இலிருந்து மீள்விக்கப்பட்டது