பக்கம்:அருளாளர்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவிளையாடலும்,பரஞ்சோதியாரும் *131

இறைவனிடத்திலே தங்கள் குறையைச் சொல்லி அர்ச்சனை செய்வது போல இருக்கிறதென்று சொல்லும் கற்பனை பக்தி அடிப்படையில் நூல் இயற்றுபவருடைய மனோநிலைக்கு ஏற்ப அமைந்துள்ளதாகும். ஆக கற்பனை செய்வதிலும் எந்த அடிப்படையிலே அவன் நூல் அமைகிறதோ அதற்கேற்றபடி கற்பனை அமைய வேண்டும்.

சேக்கிழார் சொல்லுவார். ஞானசம்பந்தர் சீர் காழியில் தோன்றினார். ஏன்?

“வேதநெறி தழைத்துஓங்க, மிகுசைவத் துறைவிளங்க” (பெயு-904)

ஏன் சீர்காழியில் பிறக்க வேண்டும்? வேறு ஊரில் பிறக்கக் கூடாதா? அதற்கு ஒரு கற்பனை செய்வார். அங்கே வயல்களிலேயே யாகம் நடைபெறுகிறதாம். அதனாலே அங்கே பிறந்தார் என்று சொன்னார். அது எப்படி வயலிலே யாகம் நடைபெறும் யாகத்திற்கு அக்னி குண்டம் வேண்டும், மாவிலை வேண்டும், நெய் வேண்டும். மாவிலைச்சுரு என்று சொல்லப்படுகிற மாவிலையிலே நெய்யை எடுத்து அக்னி குண்டத்தில் விட வேண்டும். இது யாகத்தி னுடைய இன்றியமையாத பகுதி. இது நடைபெறுகிற தென்று கற்பனை பண்ணுகிறார்.

“பரந்தவிளை வயல்செய்யப ங்கயம் ஆம் பொங்குளியில் வரம்புஇல்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய் நிரந்தரம்நீழ் இலைக்கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்ஊர் மரங்களும் ஆகுதிவேட்கும் தகையஎன மணந்துளதால்”

(பெயு-1910)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/142&oldid=1291891" இலிருந்து மீள்விக்கப்பட்டது