பக்கம்:அருளாளர்கள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 * அருளாளர்கள்


நல்ல விளை நிலம். அதிலே செந்தாமரை அடியிலே முளைத்திருக்கிறது. “வரம்பில் வளர் தேமா"- வரப்பிலே மாமரம். அதிலே கனி பழுத்து, உதிர வேண்டிய நிலையில் இருக்கிறது. “கனி கிழிந்து மது நறுநெய்"- அந்த மாம் பழங்கள் வெடித்து, மாம்பழத்திற்குள்ளே இருக்கும் சாறு, நெய் அது “நிரந்தரம்நீழ் இலை கடையால் ஒழுகுவதால்"- மாவிலை வழியாக அந்தச் சாறு ஒழுகுகிறதாம். அது அடியிலே இருக்கிற தாமரைப் பூவில் விழுகிறது. அற்புதமாக யாகம் நடை பெறுகிறது என்று சொல்லுவார்.

‘மரங்களும்’ என்ற உம்மையால், மனிதர்களும் யாகம் செய்தார்களென்பதைச் சொல்லத் தேவை இல்லை. ஆக பெரியபுராணத்தில் அடியார்கள் வரலாற்றைச் சொல்ல வருகிறவர் எப்படி கற்பனை பண்ணுகிறாரோ அதுபோல திருவிளையாடல் புராணக்காரரும் இறைவனுடைய செளலப்யத்தைச் சொல்ல வந்ததால் அதற்கேற்ப கற்பனை செய்வதைப் பார்க்கிறோம். மாணிக்கம் விற்ற படலத்தில், இன்று பெரும் பாலான வைர வியாபாரிகள்கூட வைரத்தைப் பற்றியும், மாணிக்கக் கற்களைப் பற்றியும் இவ்வளவு இலக்கணம் சொல்ல முடியாது. நூற்றுக் கணக்கானப் பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகிறார். அதைப் புரிந்து கொள்வதே கடினம். கால்மாறி ஆடிய படலத்திலே பரத இலக்கணத்தைப் பேசுவார், பாடல், பாடலாக, அதற்கு மேலே விறகு விற்ற படலம் என்று ஒன்று வருகிறது. ஹேமநாதன் என்ற ஒரு இசை வல்லுனன். வட நாட்டிலிருந்து, பல விருதுகளைப் பெற்று, மதுரைக்கு வந்தான். மதுரையில், பாண்டியனிடத்தில் பாணபத்திரன் என்ற இசை அறிஞன் இருக்கிறான். அவன் மென்மை யுடையவன். வந்தவன் எல்லையில்லாத படாடோபத் தோடு வந்திருக்கிறான். அவன் பாடி விட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/143&oldid=1291896" இலிருந்து மீள்விக்கப்பட்டது