பக்கம்:அருளாளர்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 * அருளாளர்கள்



சொல்லுக்கு இரண்டு அடைமொழிகள் கொடுக்கின்றார். 'தெரிவு அறிய சோதி' என்று கூறுவதால் அது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதென விளக்குகிறார். கச்சியப்பர் இக்கருத்தை திருஞானசம்பந்தப் பெருமானின் ஒரு தேவாரத்தல் இருந்து கூறுகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்பாடல் வருமாறு:

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி மாதுக்க நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கள் மிக்கீர் இறையே வந்துசார் மின்களே.

(திருமுறை : 3-312-576)

சுடர்விட்டுளன் எங்கள் சோதி என்று பெருமான் கூறுவதால் ஒளி, விளக்கு என்ற இரண்டையுமே பேசுகிறார் என்று நினைப்பதில் தவறில்லை.

கச்சியப்பரை அடுத்துவந்த தாயுமானவர் தொடக்கத் திலேயே,

அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய்

ஆனந்த பூர்த்தி யாகி அருளொடு நிறைந்ததெது”

- (தாயுமான சுவாமி பாடல் -)

என்று தொடங்குகிறார். சங்க காலத்திற்கு முன்னர் தொடங்கிய சோதி வழிபாடு தாயுமானவர் வரை இடையீடு இன்றி தொடர்ந்து வருவதை இதுவரை கண்டோம். இறைவனை சோதி வடிவாகக் கண்டு கூறுவதால்தான் திருஞானசம்பந்தர், மணிவாசகர் போன்றவர்களைச் சோதியுட் கலந்தார்கள் என்று கூறும் பழக்கம் பழங்காலம் தொட்டே இருந்து வந்தது. மேலே காட்டப் பெற்ற பாடல்களில் உருவ வழிபாட்டில் நம்பிக்கையும் அதன் வெளிப்பாடும் கலந்து மிளிரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/165&oldid=1291890" இலிருந்து மீள்விக்கப்பட்டது