பக்கம்:அருளாளர்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 * அருளாளர்கள்



அதிகமாகின்றது. ஒரு சமயம் கற்பிக்கும் உருவத்தை மற்றொரு சமயம் புறக்கணிக்கிறது. இதனால், சமய மாறுபாடுகளும், சமயப் பூசல்களும் தோன்றலாயின. இதனை மனத்திற் கொண்ட வள்ளல் பெருமான் நாமரூபம் கடந்த அப்பொருளுக்கு நாமாக கற்பிக்கும் உருவங்களை விட்டு விடுவதில் தவறில்லை என்று கண்டார். எனவே எல்லாச் சமயங்களையும் ஏற்றுக் கொண்டு அவற்றின் இடையே உள்ள பொதுத் தன்மையை வெளிக்கொணர்ந்து அத் தன்மையையே ஒரு தாரக மந்திரமாக ஆக்கினால் பெருநன்மை விளையக் கூடும் என்பதை ஆன்மீக வளர்ச்சி பெற்ற அப்பெரியார் உணர்ந்து கொண்டார். இந்நிலையில், தாயுமானவப் பெருந்தகையின்,

“வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா. ”

என்னும் பாடல் அவருடைய எண்ண ஒட்டம் சரியானதுதான் என்பதை வலியுறுத்திற்று. தாயுமானவர் காலத்தில் புறச் சமயங்களின் தாக்கம் அதிகமில்லை, எனவே “வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைப் பெற்ற வித்தக சித்தர்கணமே’ (தாயுமானவர் பாடல்

சித்தர்கணம்- என்று பாடுவதன் மூலம் அன்று பெருவழக்காய் இருந்த வேதாந்த மார்க்கத்தையும், சைவ சித்தாந்த மார்க்கத்தையும் ஒன்றிணைத்து ஒரு சமரச மார்க்கத்தைக் காண விழைந்தார் தாயுமானவர்.

வள்ளற் பெருமான் காலத்தில் சைவ, வைணவம் அல்லாத பெளத்த, சமண, கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களும் தழைத்திருந்தன. உருவ வழிபாட்டையே ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியத்தையும் இணைத்து ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/167&oldid=1291901" இலிருந்து மீள்விக்கப்பட்டது