பக்கம்:அருளாளர்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி 169

ஆழாழி கரையின்றி நிற்கவிலை யோகொடிய

ஆலம்அமு தாக விலையோ அக்கடலின் மீதுவட அனல்நிற்க வில்லையோ

அந்தரத் தகில கோடி தாழாமல் நிலைநிற்க வில்லையோ மேருவுந் தனுவாக வளைய விலையோ - சப்தமே கங்களும் வச்ரதர னானையில்

சஞ்சரித் திடவில் லையோ . வாழாது வாழவே இராமனடி யாற்சிலையும்

மடமங்கை யாக விலையோ மணிமந்த்ர மாதியால் வேண்டுசித் திகள்,உலக

மார்க்கத்தில் வைக்க விலையோ பாழான என்மனங் குவியஒரு தந்திரம்

பண்ணுவ துனக் கருமையோ பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற

பரிபூர னானந் தமே.

(பரிபூரணஆனந்தம் - 9) இராமனுடைய திருவடிபட்டுக் கல்லும் மங்க்ை யாயிற்றே, அப்படிப்பட்ட உனக்கு, “பாழான என்மனம் குவியொரு தந்திரம் பண்ணுவது உனக் கருமையோ?” என்று பேசுகிறார்.

என் மனம் குவியும்படியாக ஒருவழி நீ சொல்லக் கூடாதா என்று கேட்கும் போது பக்திமார்க்கத்தின் எல்லைக்கே சென்று விடுகிறார் என்று நாம் அறிய முடிகிறது. . . . -

ஆக புலனடக்கம் இல்லாவிட்டால் வளர்ச்சி அடையவே முடியாது. உலகியல் முறையிலேயே வளர முடியாது என்றால் ஆன்மிக முறையில் வளர முடியாது என்று சொல்லவே தேவையில்லை. ஆகையினாலேதான் புலனடக்கம் தேவை என்பதை வலியுறுத்த வந்த தாயுமானவப் பெருந்தகை மனிதன் தன்னுடைய

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/180&oldid=659504" இலிருந்து மீள்விக்கப்பட்டது