பக்கம்:அருளாளர்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 * அருளாளர்கள்



சமரசம் வகுத்தநீ யுன்னையான் அணுகவுந்

தண்ணருள் வகுக்க இலையோ

(சின்மயானந்தகுரு4)

“ஐயா! சைவம் முதலான எல்லாச் சமயங்களையும் படைத்தவன் நீ தான். சமயம் கடந்த மோன நிலையைப் படைத்தவனும் நீதான். இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்தவனாகிய நீ உன்னை நான் நெருங்கி வருவதற்குரிய வழியை வகுக்காமலா விட்டு விட்டாய்?’ என்று பேசுகிறார். ஆகவே எல்லாச் சமயங்களையும் உறுதியாக நம்பினார் என்று தெரிகிறது. அந்த நம்பிக்கை வந்த பிறகு சமயப் போராட்டத்திற்கோ சமயக் காழ்ப்புணர்ச்சிக்கோ இடமே இல்லை என்பதை அறிய முடிகிறது. இதனை வலியுறுத்தும் வகையில் பின்வருமாறு பாடுகிறார்.

வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்

விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன r

வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா.

(கல்லாலின்-25)

“வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே பூராய மா யுணர ஊகமது தந்தருளும்’ (பரிபூர-8) என்றும், “சந்தமும் எனது செயல் நினது செயல், யான் எனும் தன்மை நினையன்றி இல்லாமையால் வேறே, வேதாந்த சித்தாந்த சமயம் இதுவே (பரிபூர-5 என்று கூறுகிறார் என்றால் இவரது சமயம் எல்லாச் சமயங்களும் இறைவனாலே படைக்கப் பட்டது என்பதை நன்கு அறிந்து, நம்பி, உறுதியான மனோ நிலையில் தோன்றியது என்பதை அறிய முடிகின்றது. . . -

இதற்கடுத்தபடியாக தாயுமானவப் பெருந்தகை வாழ்ந்த காலத்திலே வாதப் பிரதிவாதங்கள் மிகுதியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/183&oldid=1285853" இலிருந்து மீள்விக்கப்பட்டது